ஓன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத - இளைஞர் விரோத அக்னிபாதை திட்டத்தை கைவிடக்கோரி குமரி மாவட்டம் குலசேகரம் சிபிஎம் வட்டாரக்குழு சார்பில் அரசமூடு சந்திப்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார செயலாளர் பி.விஸ்வம்பரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்சி.ஸ்டாலின்தாஸ், டி.செளந்தர் வி.ஜெயச்சந்திரன் டி.ஸ்ரீகுமார் ஏ.சுபாஷ்கென்னடி ஜே.ஜூடஸ்குமார், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.