districts

img

ரயில் சக்கர அமைப்பில் விரிசலை கண்டறிந்து, விபத்தை தவிர்த்த பணியாளருக்கு பாராட்டு

திண்டுக்கல், ஜுன் 9- ரயில் சக்கர அமைப்பில் விரிசல் இருப்பதை கண்ட றிந்து, பெரும் விபத்தை தவிர்த்த செங்கோட்டை பணியாளருக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் விருது வழங்கி கௌரவித்தது.   கொல்லம் -சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் செங்கோட்டை ரயில் நிலை யம் வந்தது. வண்டி மற்றும் வேகன் டெக்னீசியன் ரகுபதி வழக்கமாக பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டி ருந்தார்.  அப்போது என்ஜினிலி ருந்து 7வது பெட்டியான எஸ்.3 கோச்சின் சக்கர அமைப்பில் அதாவது போகி யில் விரிசல் இருப்பதை கண்டறிந்தார். இதனை யடுத்து ரயில்வே அதிகாரிக ளுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக பயணிகளை மற்ற கோச்சுகளில் அமர வைக்கப்பட்டு எஸ். 3 கோச் ரயிலில் இருந்து கழற்றி விடப்பட்டது.  மதுரை வந்த அந்த ரயிலில் புதிதாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டு சென்னை புறப்பட்டது. இது குறித்து தகவல் கொடுத்த பணியாளர் ரகுபதியின் பொ றுப்புணர்வை பாராட்டி, மதுரை கோட்டத்தின் வாராந்திர பாதுகாப்பு கூட்டத்தில் ரகுபதிக்கு பாது காப்பு விருது வழங்கப் பட்டது.  மதுரை கோட்ட மேலாளர் பி.ஆனந்த் இந்த விருதை வழங்கி ரகு பதியை கௌரவித்து பாராட்டினார்.  இந்நிகழ்ச்சியில் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் டி.ரமேஷ்பாபு, முதுநிலை கோட்ட இயந்திரவியல் பொறியாளர் பி.சதீஷ் சரவணன், மூத்த கோட்ட பாதுகாப்பு அதிகாரி மொஹி தீன் பிச்சை உட்பட அதிகாரி கள் கலந்து கொண்டனர்.