districts

img

கலைஞர் நூற்றாண்டுவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

மதுரை, ஆக.14- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம்- மாநகராட்சி பள்ளிகளில்  நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளைப் பாராட்டி கேடயம் மற்றும் சான்றி தழ்கள் வழங்கும் நிகழ்வு  திங்களன்று மதுரையில் நடைபெற்றது. தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேடயங்களை வழங்கினார். நிகழ்வில் ஆட்சியர் சங்கீதா மேயர் இந்திராணி, துணை மேயர் தி. நாகராஜன், மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமார்,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, பேராசிரியர்கள் கு.ஞானசம்பந்தன், ராஜா கோவிந்தசாமி, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.