districts

img

பாஜகவினருக்கு வாக்களிப்பது பாலில் விஷத்தைக் கலப்பது விருதுநகரில் கனிமொழி எம்.பி பேச்சு

விருதுநகர், பிப்.10- விருதுநகர் நகராட்சியில் போட்டியிடும் திமுக உள்ளிட்ட தோழமைக்கட்சி வேட்பாளர் களை ஆதரித்து முத்துராமன் பட்டி, தந்திமரதெரு, தேசபந்து மைதானம், தெப்பக்குளம், புல்ல லக்கோடை சாலை ஆகிய பகுதி களில் திமுக நாடாளுமன்ற உறுப் பினர் கனிமொழி பரப்புரை செய் தார். அப்போது அவர் பேசிய தாவது:  நீட் தேர்வை வேண்டாம் என அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் தீர்மானம் நிறைவேற்றினால், பாஜகவின் நான்கு உறுப்பினர் கள் மட்டும் வெளிநடப்பு செய் கின்றனர். மாணவர்களின் எதிர் காலம் மற்றும் கல்வி குறித்து இவர்களுக்கு அக்கறை இல்லை. எனவே, இவர்களுக்கு வாக்க ளிக்கக் கூடாது. பாஜகவிற்கு ஒரு வாக்களித்தால் அது ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷத்தை கலந் தது போல் ஆகி விடும். பாஜகவினருக்கு, தமிழர் களைப் பற்றிய அக்கறை இல்லை நம்முடைய உணர்வுகள், தேவை கள் அவர்களுக்கு புரியாது. மக் களை மதத்தின் பெயரால் பிரித்து சண்டை போட வைத்து ஓட்டு வாங்குகின்றனர்.  அதிமுக - பாஜக உள்ளாட்சி யில் கூட்டணி இல்லை. ஆனால் தேசிய அளவில் கூட்டணி என்று சொல்கிறார்கள்.  திமுக ஆட்சிக்கு வந்ததும்,  மகளிருக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம். கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம், மக ளிர் சுய உதவிக் குழுக் கடன்கள் ரத்து என என கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட் டுள்ளது. எனவே, உள்ளாட்சித் தேர்தலில் சரியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.