districts

திருச்சி பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு

திருச்சிராப்பள்ளி, ஜன. 15 - திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. போட்டியை அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார். போட்டியில் முதல் காளையை பிடித்து வெற்றி பெற்ற துவாக்குடியை சேர்ந்த வீரர் மூர்த்திக்கு 4 கிராம் தங்க மோதிரத்தை அன்பில் மகேஷ் பொய்யாமொழி அணிவித்து பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், வருவாய் கோட்டாட்சியர் தவசெல்வம், அலுவலர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த போட்டியில் 486 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு காளை ஒன்று, மாட்டின் உரிமையாளரான மீனாட்சிசுந்தரம் என்பவரை விலாவில் குத்தி தள்ளியதையொட்டி காயமடைந்த அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். காளை அடக்கியவர்களில் 42 பேர் காயம்பட்டனர். சிலர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.