திண்டுக்கல், மே 11- சமூகத்தில் வீடற்ற ஏழை மக்கள் அனை வருக்கும் சொந்தமாக குடியிருப்பு வசதி பெறு வதற்காக இலவச வீட்டுமனைப் பட்டா அல்லது வீடு வழங்க வேண்டுமென்பதே தமிழக அர சின் கொள்கையாகும். இதனை அடிப்படை யாகக் கொண்டு கிராம நத்தத்தில் காலியாக வுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் தகுதி யுடைய, வீடற்ற ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை ஒப்படை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் 07.05.2021 முதல் தற்போது வரை இரண்டு ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் 19,205 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில், அதாவது, திண்டுக்கல் (கிழக்கு) வட்டத்தில் 1731 பயனாளிகளுக்கு ரூ.3.12 கோடி மதிப்பிலும், திண்டுக்கல்(மேற்கு) வட்டத்தில் 2303 பயனாளிகளுக்கு ரூ.4.14 கோடி மதிப்பிலும், ஆத்துார் வட்டத்தில் 1721 பய னாளிகளுக்கு ரூ.2.58 கோடி மதிப்பிலும், நிலக்கோட்டை வட்டத்தில் 3615 பயனாளி களுக்கு ரூ.4.34 கோடி மதிப்பிலும், ஒட்டன் சத்திரம் வட்டத்தில் 2689 பயனாளிகளுக்கு ரூ.1.88 கோடி மதிப்பிலும், பழனி வட்டத்தில் 2626 பயனாளிகளுக்கு ரூ.4.73 கோடி மதிப்பி லும், கொடைக்கானல் வட்டத்தில் 1279 பய னாளிகளுக்கு ரூ.2.94 கோடி மதிப்பி லும், வேடசந்துார் வட்டத்தில் 1654 பயனாளி களுக்கு ரூ.1.16 கோடி மதிப்பிலும், நத்தம் வட்டத்தில் 255 பயனாளிகளுக்கு ரூ.22.95 லட்சம் மதிப்பிலும், குஜிலியம்பாறை வட்டத்தில் 1332 பயனாளிகளுக்கு ரூ.79.92 லட்சம் மதிப்பிலும் என ஆக மொத்தம் 19,205 பயனாளிகளுக்கு ரூ.25.91 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளி திண்டுக்கல் மாவட்டம்,
தோட்ட னுாத்து கிராமம், இரண்டளைபாறை பகுதி யைச் சேர்ந்த திருமதி கண்ணம்மாள்(வயது 55) என்பவர் கூறுகையில், எனது கணவர் நாகன் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். எனது மகனுடன் நான் வசித்து வரு கிறேன். கூலிவேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு இலவச வீட்டுமனை பட்டா வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டி ருந்தேன். கணவர் இல்லாததால் அரசு அலு வலகங்களுக்குச் சென்று அதற்கான பணி களை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந் தேன். அப்போதுதான், அரசு சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படுவதை அறிந்து, நானும், நான் குடியிருக்கும் வீட்டிற்கு இலவச வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது எனக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கிடைத்துள்ளது. எனது கோரிக்கையினை ஏற்று இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். இத்தகவலை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன் , உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) அ.இளையேந்தி ரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.