districts

ஏப்.19 இல் கோரிக்கைகள் மீது முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என நம்புகிறோம்

மதுரை, மார்ச் 23-  ஏப்ரல்19 அன்று ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது  முதலமைச்சர் அறிவிப்புகளை வெளி யிடுவார் என நம்புகிறோம் என்று ஓய்வுபெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரி யர்கள் தெரிவித்தனர்.  ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரி யர் நலச்சங்கத்தின் மாநில மாநாடு  மதுரை பசுமலை மன்னர் கல்லூரியில்  மார்ச் 26 அன்று நடைபெற உள்ளது. மாநாட்டின் நோக்கங்கள் குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ. முரளீதரன், பொதுச் செயலாளர் எஸ்.  பிரபாகரன், பொருளாளர் க. சி. மனோ கரன், மதுரை மாவட்டத் தலைவர் முரு கேசன், செயலாளர் ராமசாமி ஆகி யோர் வியாழனன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கைகளான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி உயர்வை  ஒன்றிய அரசு வழங்கும் அதே நாளில்  மாநில அரசு ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். குடும்பப் பாது காப்பு நல நிதியில் ரூ.80- லிருந்து ரூ. 150-ஆக உயர்த்தி பிடித்தம் செய்யப் படுகிறது அதை வழங்க தமிழக அரசு மறுக்கிறது. இறந்து விட்ட ஓய்வூதி யர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்  படுவதை ரூ.2 லட்சமாக உயர்த்தி  வழங்க வேண்டும் என தொடர்ந்து வலி யுறுத்துகிறோம். இது ஓய்வூதியர்களி டம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தில் இருந்துதான் கேட்கிறோம்.

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் ரூ.350-லிருந்து ரூ.497- ஆக உயர்த்திப் பிடித்தம் செய்தும் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு சிகிச்சைக் கட்டணம் முழுவதையும் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்துகிறோம். அரசு மருத்துவச் சிகிச்சைக் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். காப்பீட்டு நிறு வனம் அறுவைச் சிகிச்சைக்கு மட்டும்  மூன்றில் ஒரு பங்கு கட்டணத்தையே வழங்குகிறது. சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரம் வழங்க அரசாணை வெளி யிட்டும் ரூ.23 ஆயிரம் வரையே காப்பீட்டு நிறுவனம் வழங்கி வருகிறது. இது காப்பீட்டு நிறுவனத்தின் லாபத் தைக் காப்பாற்றும் திட்டமாகும்.  திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியான 70 வயது முடிவடைந்த ஓய்வூதியர்களுக்கு பத்து  சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்  படும் என்ற வாக்குறுதியை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும். சென்னையில் வழங்கப்படும் இலவசப் பேருந்துக் கட்டணச் சலுகை யை தமிழ்நாடு முழுவதும் அமல் படுத்த வேண்டும். ஒன்றிய அரசு ஊதி யக்குழு அறிக்கையின்படி வழங்கப்  படும் மருத்துவப்படி ரூபாய் ஆயி ரத்தை மாநில அரசு ஓய்வுபெற்ற ஆசி ரியர்களுக்கும் வழங்க வேண்டும்.  தமிழ்நாடு அரசு மார்ச் 20 அன்று வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் ஓய்வூதியர்களைப் பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.  ஏப்ரல் 19 அன்று நடைபெறும் ஓய்வூதியர்களுக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது தமி ழக முதல்வர் எங்களது கோரிக்கை கள் மீது அறிவிப்புகளை வெளியிடு வார் என்று நம்புகிறோம்.இவ்வாறு  அவர்கள் தெரிவித்தனர்.