இராமநாதபுரம்,ஏப்.26- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக சர்வதேச பெண்கள் தினம் மற்றும் புத்தக தின விழா இராமநாதபுரத்தில் மாவட்டச் செயலா ளர் இரா ஆ வான் தமிழ் இளம் பரிதி தலைமையில் நடை பெற்றது. பழனியாண்டி வரவேற்றார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் எஸ் சந்திரசேகர் துவக்கி வைத்து பேசினார் .தற்போது பெண் உரிமை வளர்ந்துள்ளதா தளர்ந்துள்ளதா என்ற தலைப்பில் நடு வர் எழுத்தாளர் மங்களக்குடி என் கலையரசன் தலைமை யில் மாவட்டத் தலைவர் முத்துலட்சுமி, பொறியாளர் ஆர். குருவேல், பேராசிரியர்கள், பாலமுருகன் மற்றும் ரேணுகா தேவி ஜெயக்கொடி மற்றும் நிர்மலா தேவி பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில் ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் பி.சுகந்தி சிறப்பு ரையாற்றினார். முன்னதாக சர்வதேச குறும்பட விழாவில் முதல் பரிசு பெற்ற பாஞ்சாலி படத்திற்கு கதை, வசனம் எழுதிய எழுத்தாளர் மங்களக்குடி என். கலையரசனை மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் பி சுகந்தி பாராட்டி கௌரவித்தார் . விழாவில் கல்லூரி மாணவ மாணவிய ரின் பாடல்கள் மற்றும் கரகாட்டம் சிலம்பாட்டம் ஒயி லாட்டம் கோலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை கலைஞர் விஜயராம் தொகுத்து வழங்கி னார். மாவட்ட துணைச் செயலாளர் சாந்தி நன்றி கூறினார்.