மதுரை, மார்ச் 7- மதுரை ரயில்வே கோட்டத் திற்குட்பட்ட பழனி - பொள் ளாச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே 63 கிலோமீட்டர் தூரத்திற்கான ரயில் பாதை மின் மயமாக்கல் பணியினை பெங்க ளூரு தென் சரக ரயில்வே பாது காப்பு ஆணையர் அபய் குமார் ராய் திங்களன்று ஆய்வு செய் தார். சண்முகா நதி ஆற்றுப்பாலம், புஷ்பத்தூர் அருகே ரயில் பாதை மேலே குறுக்கிடும் மின் வழித் தடம், மைலாபுரம் வயலூர் ரயில்வே கேட், மைவாடி ரோடு உப மின் நிலையம் மற்றும் ரயில் நிலையம், உடுமலைப்பேட்டை ரயில் நிலையம், நடைமேம் பாலம், கோமங்கலம் ரயில் நிலையம் ஆகியவற்றில் செய யப்பட்டுள்ள மின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது முதன்மை மின் பொறியாளர் ஆர்.கே. மேத்தா, முதன்மை மின்மயமாக் கல் திட்ட இயக்குனர் சமீர் டிஹே, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் பங்குபெற்றனர்.