districts

img

இந்தியா கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும்

விருதுநகர், ஜூலை 30- வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என விருதுநகர் மக்க ளவை உறுப்பினர் ப.மாணிக்  கம் தாகூர் நம்பிக்கை தெரி வித்தார். விருதுநகரில் மக்க ளவை உறுப்பினர் ப.மாணிக்  கம் தாகூர் காமராஜர் பிறந்த நாள விழாவை சிறப்பாக ஏற்  பாடு செய்தவர்களுக்கு பாராட் டுச் சான்றிதழ் வழங்கினார். பின்னர் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதா வது:  மணிப்பூர் பிரச்சனையில் இந்தியா கூட்டணி கட்சி கள் ஒருங்கிணைந்து பய ணிக்கிறோம். கார்கில் வீர ரின் மனைவி உட்பட 2 பெண்  களுக்கு நடந்த கொடூர சம் பவங்கள் காணொலியாக வெளி வந்தது. இந்திய அரசை  உச்சநீதிமன்றமும் எதிர்க் கட்சிகளும் தொடர்ந்து வலி யுறுத்தியதன் விளைவாக  தற்போது சிபிஐ விசார ணைக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.  ஆனால், பிரதமர், நாடா ளுமன்றத்திற்குள் வந்து மணிப்பூர் பற்றி பேச மறுக் கிறார், பயப்படுகிறார்.  உள்துறை அமைச்சரை அனுப்பி வைத்து பதில் சொல்வார் என்கிறார். மோடி பதில் சொல்கிறவரை நாடா ளுமன்றம் வெறும் பேசு பொருளாக இருந்து விடக் கூடாது என்பதை இந்தியா கூட்டணி வலியுறுத்துகிறது. பிரதமர் மணிப்பூருக்கு செல்லவில்லை. ராகுல் காந்தி மட்டும் தான் நல்லிணக்க பயணமாக  மணிப்பூர் சென்றார்.

மக்  களை சந்தித்தார். அவர் களது பிரச்சனையைப் பற்றி  தொடர்ந்து பேசி வந்தார்.  ஆளுநரிடம் எடுத்துரைத் தார்.  மணிப்பூர் பிரச்சனை யை பேசும் போது நாடாளு மன்றத்தில் பிரதமரும் இல்லை. உள்துறை அமைச் சரும் இல்லை. மணிப்பூரை விட அண்ணாமலையின் யாத்திரை அவர்களுக்கு பெரிதாக தெரிகிறது. பிரதமரை பொறுத்த மட்டில் இந்தியா கூட்டணி என்ற வார்த்தையை கேட்  டாலே குழப்பம் ஆகிவிடு கிறார். இந்த கூட்டணி மிகப்  பெரிய வெற்றியை பெறப் போகிறது. தற்போது எதிர்க் கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் சூழ்நிலைக்கு மோடி தள்ளப்பட்டு இருக் கிறார். இந்தியா கூட்டணி சரி யான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.  அண்ணாமலையின் தமிழக யாத்திரையால் எந்த  மாற்றமும் ஏற்படாது. பாஜக  அரசு, தமிழகத்திற்கு தொட ர்ந்து துரோகம் செய்து கொண் டிருக்கிறது. இங்குள்ள தொழில்களை, விவசாயத்தை, மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகிறது.  பிரதமராக மன்மோகன் சிங் இருந்த காலத்தில் என்.எல்.சியை விரிவாக்கம் செய்ய முயன்ற போது மக் கள் எதிர்ப்பு கிளம்பியதால் அதை நிறுத்த முடிவு செய் யப்பட்டது. ஆனால் தற்போதுள்ள ஒன்றிய அரசானது, மாநில  அரசுக்கு அழுத்தம் கொடுக்  கிறது. மாநில அரசு மூலமாக  செய்ய முயல்கிறது. மாநில அரசின் மீது பழியை போட சூழ்ச்சி நடக்கிறது. இவ்வாறு அவர் தெரி வித்தார்.