districts

மதுரை முக்கிய செய்திகள்

உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரித்திடுக:விக்கிரமராஜா

திருவில்லிபுத்தூர், ஜன.29- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கூட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது.  பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியா ளர்களிடம் கூறுகையில்,  மே 5 ஆம் தேதி வணிகர் சங்க  மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற உள்ளது. ராஜபாளை யம் - சத்திரப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பால பணி களை விரைந்து முடிக்க வேண்டும். விருதுநகர் - செங்  கோட்டை ரயில் பாதை மின்மயமாக்கல் பணியை விரைந்து  நிறைவேற்ற வேண்டும். உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழக அரசு முடிவு அறிவிக்கும் வரை வணிகர்கள்  புகை யிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. புகை யிலை விற்பனை  தொடர்பாக வணிகர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.         இந்த கூட்டத்தில் திருவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரிக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்டத் தொடங்க  வேண்டும். சிவகாசியில் பட்டாசு தொழிலில் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும், வெடி பொருட்களை பாதுகாப்புடன் கையாள்வது மற்றும் தொழில் புரிவது எப்படி என்று தெளிவுபடுத்த சிவகாசி யில் பயிற்சி பெற்ற ஒன்றை திறக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூடலூரில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்:  7 பேர் கைது

தேனி,ஜன.29- தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த பிரபு  என்பவர்  ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, கூடலூரில் வீட்டில் பதுக்கி வைத்து  விற்பனை செய்வதாக கூடலூர்   காவல் ஆய்வாளர் பிச்சைபாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து அவரது தலைமையில் போலீசார் கூட லூர் வடக்குரத வீதியில் ரோந்து சென்றனர். அப்போது  அப்பகுதியில்  ஒரு வீட்டு வாசலில் பைக்குடன் நின்றிருந்த  இரண்டு வாலிபர்களிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை  நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசி னர். அவர்களது பைக்கை  போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் இரண்டு கிலோ கஞ்சா இருப்பது  தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்த சபரிமணி(25), திருச்சி அரிய மங்கலத்தைச் சேர்ந்த அருண்பாண்டி(26) என்பதும், கஞ்சாவை கூடலூர் வடக்குரதவீதியைச் சேர்ந்த நவீன்குமார் மனைவி ரஞ்சிதாவிடம் வாங்கியதும் தெரி யவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு நான்கு கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கி ருந்த ரஞ்சிதா(26), கூடலூர் வடக்கு ரதவீதி ரங்கநாதன் மனைவி முருகேஸ்வரி(47), மகன் ரஞ்சித்குமார்(24), கூட லூர் கள்ளர்மடத்து தெருவைச்சேர்ந்த பிரபு (38), அவரது மனைவி சிவரஞ்சனி(27) என மூன்று பெண்கள் உட்பட ஏழு பேர்களை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா கடத்த பயன்படுத்திய பைக் மற்றும் கஞ்சா விற்ற பணம் ரூ 26 ஆயிரத்தையும் பறி முதல் செய்தனர்.

மனநலம் பாதித்த தலித் பெண்ணிடம் பாலியல் வல்லுறவு முயற்சி

சாத்தூர், ஜன.29- சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் மன நலம் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணை பாலி யல் வல்லுறவு செய்திட முயற்சித்தவர் மீது நட வடிக்கை எடுத்திட காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே  ஓ.மேட்டுப்பட்டியில் உள்ள இந்திரா காலனி யைச் சேர்ந்தவர் மாரியம்மாள்(53). இவர் தலித்  சமூகத்தைச் சேர்ந்தவர். சற்று மனநலம் பாதிக் கப்பட்டவர்.  இந்தநிலையில், அதேபகுதியைச் சேர்ந்த  சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த மணி கண்டன்(எ) கருப்பசாமி என்பவர், மாரியம்மா ளின் ஆடைகளை கிழித்து பாலியல் வல்லுறவு செய்திட முயற்சித்துள்ளார். அப்போது, அவ்வழியே சென்ற இரு பெண்கள் இந்த கொடூரச் சம்பவத்தை பார்த்து, மணிகண்டனை திட்டியுள்ளனர். அப்போது, மணிகண்டன், அவர்களை மிரட்டி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து, மாரியம்மாளின் மகன்  சமுத்திரம் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை தேடி வருகின்றனர்.

விருதுநகர் சந்தை நிலவரம்  நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விலை உயர்வு

காபி விலை பெரும்  சரிவு

விருதுநகர், ஜன.29- விருதுநகர் சந்தையில் நல்லெண்  ணெய் மற்றும் கடலை எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால், இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  வத்  தல், உளுந்து விலை சற்று குறைந்துள்ளது.  காபி விலை பெரும் சரிவை சந்தித் துள்ளது. விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் நல் லெண்ணெய் விலையானது   ரூ.165 உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 15 கிலோ  நல்லெண்ணெய் ரூ.6270 க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் திடீரென ரூ.165 உயர்த்  தப்பட்டு தற்போது ரூ.6435க்கு விற்கப்படு கிறது. கடலை எண்ணெய் : இதேபோல் கடந்த  வாரம் 15 கிலோ கடலை எண்ணெய் ரூ. 3020க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் ரூ.20  உயர்வு ஏற்பட்டு நிகழ்வாரத்தில் ரூ.3050 என  விற்கப்படுகிறது. குண்டூர் வத்தல் : கடந்த சில மாதங்க ளாக உச்சத்தில் இருந்த குண்டூர் வத்தல், தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது. கடந்த வாரம் 100 கிலோ வத்தல் ரூ.23 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை  விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.20 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது.

துவரம் பருப்பு : இதேபோல் கடந்த வாரம் 100 கிலோ துவரம் பருப்பு ( நயம்  புதுஸ் லயன்) கடந்த வாரம் ரூ.10 ஆயிரத்  திற்கு விற்கப்பட்ட நிலையில் திடீரென ரூ. 700 உயர்ந்து ரூ.10,8700க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாசிப் பயறு : இதேபோல் கடந்த வாரம்  100 கிலோ பாசிப் பயறின் விலை ரூ.7ஆயிரம் என விற்பனையான நிலையில், தற்போது ரூ.300 உயர்த்தப்பட்டு ரூ.7300க்கு விற்கப்படுகிறது. பாசிப்பயறு ( இந்தியா) நாடு விலை கடந்த வாரத்தை விட ரூ.300 உயர்ந்து ரூ.9400க்கு விற்பனையாகிறது. உளுந்தம் பருப்பு: அதேவேளை உருட்டு உளுந்தம் பருப்பு கடந்த வாரம்  ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.200 குறைவு ஏற்பட்டு  100 கிலோ உருட்டு உளுந்து ரூ.10,800க்கு விற்கப்படுகிறது. இதேபோல் தொலி உளுந்தின் விலை கடந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.9200 என விற்பனையானது. இந்த வாரம் ரூ.200 குறைந்து ரூ.9800 என்ற  விலையில் விற்கப்படுகிறது. காபி விலை பெரும் சரிவு : அதிக அள வில் இறக்குமதி செய்யப்பட்டு வருவதால்  காபி விலை பெரும் சரிவைச் சந்தித்துள் ளது. கடந்த வாரம் 50 கிலோ காபி பிளாண்டேசன் பி.பி வகை ரூ.21600க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.3100 திடீரென குறைந்து, ரூ.18500 என்ற  விலையில் விற்கப்படுகிறது. இதேபோல் காபி பிளாண்டேசன் ஏ வகை ரூ.21500 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த வாரம் ரூ.2500 குறைந்து, தற்போது ரூ.19ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் காபி பிளாண்டேசன் சி வகை ரூ.3500 குறைந்து, தற்போது ரூ.16 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. மேலும், பிற பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
 

 

 

;