டாக்டர் அம்பேத்கர் போட்டித் தேர்வு பயிற்சி மையம்-தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அரசு போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பு தொடக்க விழா மதுரை அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் அ.பாலமுருகன், மாவட்டத் தலைவர் பி.வீரமணி, அம்பேத்கர் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர்கள் ந.சுரேஷ்குமார், பரவை பாலு, மாவட்டக் கல்வி அதிகாரி அ.குருநாதன், நாகராஜ், மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், காது கேளாதோர் வாய் பேசாத அமைப்பின் சங்க நிர்வாகி சொர்ணவேல், ஜோதிபாசு ஆகியோர் கலந்துகொண்டனர்.