சிவகங்கை. பிப்.25- வேளாண்மைத்துறையில் பாரம் பரிய விவசாயப்பணிகளை திறம்பட மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண்த்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை வழங்கி விவசாயிகளின் தேவைக்கேற்ப திட்டங்களை வழங்க திட்டமிட்டு, அதன்படி வேளாண்மைத் துறையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண் பொறியியில்துறை, தோட்டக் கலைத்துறை என முப்பெரும் துறை யின் மூலம் விவசாயிகளுக்கு தேவை யான விழிப்புணர்வுகளை வழங்கி இயற்கை விவசாயப்பணிகளை மேற் கொள்ள ஏதுவாக தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இயற்கை விவசாயம் மூலம் பாரம்பரிய நெல் சாகுபடியினை சிறப்பாக மேற்கொண்;ட சிவகங்கை மாவட்டம், பொன்னாகுளம் கிரா மத்தை சேர்ந்த பெரியசாமி, என்ற விவசாயி தெரிவிக்கையில், விவசாயத் தொழிலை கடந்த 25 வருடங்களாக செய்து வருகிறேன். எனது விளை நிலமான 7 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மற்றும் 2 ஏக்கர் தென்னை மற்றும் வாழை என பயிரிட்டு இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். மேலும், எனது விளைநிலமான 7 ஏக்கரில் ஒருமுறை உரமிடுவதற்கு ரூ.8000-10 ஆயிரம் வரை செலவானது. ஒரு மகசூலுக்கு ரூ.1 இலட்சம் வரை செலவானதால், வேளாண் துறையைச் சார்ந்த அலுவலர்களின் அறிவுரை யின்படி, நான் இயற்கை விவசாயத் திற்கு மாறினேன். கோடை விவசா யத்தில் முதன் முதலாக நெல் பயிரில் இயற்கை விவசாயத்தை மேற்கொண் டேன். ஆரம்பத்தில் எனக்கு இயற்கை விவசாயத்திற்கு மாறியது சிரமமாக இருந்து வந்தது. இயற்கை விவசாயம் தொடர்பான திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட நெல் இரகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டி ருந்தன. அவற்றை பார்க்கும் போது மிகவும் வியப்பாக இருந்தது. இதனால் இயற்கை விவசாயம் மீதான ஆர்வம் எனக்கு அதிகரித்தது. இயற்கையாக பஞ்சகாவ்யா, பூச்சிவிரட்டி ஆகியவற்றை நானே தயார் செய்து பயன்படுத்தி வந்ததால், எனக்கு ஒரு ஏக்கருக்கு 35 மூட்டை வரை நெல் மகசூல் கிடைக்கின்றன. இயற்கை முறையில் உர செலவு மிச்சம். முடிந்த வரை இயற்கை விவசாயத் தினை கடைப்பிடித்து நல்லத்தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்து விவ சாயிகளுக்கு கொடுப்பதில் எனக்கு மனநிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த வாய்ப்பை கொடுத்த தற்கு நானும் எனது குடும்பமும் தமிழக அரசிற்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.