districts

நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை மஞ்சளாறு அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி, செப்.22- நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவ தால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டி யுள்ளதை தொடர்ந்து முதற் கட்ட வெள்ள அபாய எச்ச ரிக்கை விடப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் மஞ்ச ளாறு அணை அமைந்துள் ளது. மூலையாறு, வரட்டாறு, தலையாறு, மஞ்சளாறு பகுதியில் இருந்து வரும் நீர் இங்கு தேக்கி வைக்கப் படுகிறது. 57அடி உயரம் உள்ள இந்த அணை நீர்மூலம் தேனி, திண்டுக்கல் மாவட் டத்தில்  மொத்தம் 5 ஆயி ரத்து 259 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ம் தேதி தண்ணீர் திறக்கப்படு வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு போதிய மழைப் பொழிவு இல்லாததால் நீர்மட்டம் உயரவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் நீர்வரத்து அதிகரித்து 51 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. ஆகவே தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, வத்த லக்குண்டு, சிவஞானபுரம் பகுதி கிராம மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வரு வதால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 300 கனஅடியில் இருந்து 928 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்மட்டமும் 118.80 அடியிலிருந்து 119.05 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.  வைகை அணையின் நீர்மட்டம் 48.13 அடியாக உள்ளது. 333 கன அடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 81.61 அடி யாக உள்ளது. 19 கன அடிநீர் வருகிறது. 3 கன அடிநீர் திறக்கப்படுகிறது.  கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழை யால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கும்பக்கரை அருவி யில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. எனவே, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். வெள்ளியன்றும் 3-வது நாளாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தடை தொடரும் என அறிவித்துள்ளனர். மழையளவு பெரியாறு 13.2, தேக்கடி 2.4, சண்முகாநதி 1.8, போடி 3, மஞ்சளாறு 7, சோத்து ப்பாறை 3, வீரபாண்டி 4.2,  அரண்மனைப்புதூர் 13 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.