districts

img

சு.வெங்கடேசனை ஆதரித்து ஜி.ராமகிருஷ்ணன் பிரச்சாரம்

மதுரை,ஏப்.16-  திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பா ளர் சு.வெங்கடேசனை ஆதரித்து கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஏப்ரல் 16 செவ்வாய்க்கிழமையன்று வாக்குச் சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.

மதுரை தெற்கு தொகுதியில்  வில்லாபுரம்,  அனுப்பானடி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்தில் ஜி.ராமகிருஷ்ணன் உரையாற்றி னார்.  

இதில் தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர்  மு.பூமிநாதன், திமுக வில்லாபுரம் பகுதிச் செயலாளர் போஸ் முத்தையா, காமராஜ்புரம் பகுதி செயலாளர் ஆர்.எம். முத்து, வார்டு செயலா ளர்கள் கார்மேகம், கர்ணா,காங்கிரஸ் பகுதி தலைவர் சுந்தர், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பி னர் ஆர்.கருமலையான், மாநிலக்குழு உறுப்பி னர்கள் கற்பகம், இரா.விஜயராஜன், தெற்கு தொகுதி பொறுப்பாளர் அ.ரமேஷ், பகுதிக்குழு செயலாளர் ஜெ.லெனின்,மதிமுக மாவட்டச் செய லாளர் முனியசாமி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இரண்டு மையங்களிலும் நடைபெற்ற பிரச்சாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர்  பங்கேற்றனர்.