நாகர்கோவில், ஆக.31- கன்னியாகுமரி மாவட்டம் தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுக முகத்துவார மணலில் வள்ளம் மோதி கவிழ்ந்த மீனவரை கடந்த 3 நாட்களாக மீட்க முடியாத நிலையில் மீனவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஆக 29 திங்களன்று இணையம் புத்தன் துறையைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (67). இவர் சிறிய பைபர் படகு ஒன்றில் தேங்காபட்டணம் துறைமுகத்தி லிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். மதியம் கரை திரும்பிக் கொண்டிருந்தபோது தேங்காபட்டணம் துறைமுகத்தின் முகத்துவார பகுதியில் வந்தபோது மணல்திட்டில் படகு சிக்கி கவிழ்ந்தது. இதில் அமல்ராஜ் கடலுக்குள் விழுந்து தத்தளித்தார். அப்போது அந்த வழியாக படகில் வந்த மீனவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ராட்சத அலை அமல்ராஜைமூழ்கடித்தது. இதைத் தொடர்ந்து மீனவர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர். ஆனால் அமல்ராஜ் கிடைக்க வில்லை. இதுகுறித்து கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல் படையினரும் மீனவர்களும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மூன்றாவது நாளாக புதனன்றும் தேடுதல் பணி தொடர்ந்தது. ஆனால் அமல்ராஜ் பற்றி எந்த தடயமும் கிடைக்கவில்லை. குமரி மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தேங்காப்பட்ட ணத்தில் தூத்தூர், இனையம் மண்ட லத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்ப தற்கு வசதியாக. மீன்பிடித் துறைமுகம் கட்டப்பட்டது. ஆனால் துறைமுகம் சரி யான கட்டமைப்புடன் அமைக்கப்படாத தால் மீன்பிடி துறைமுக முகத்துவா ரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியா வது தொடர் கதை யாக நடந்து வரு கிறது. கடந்த 4 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துள்ளனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூத்துறையிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற சைமன் என்பவர் முகத்துவாரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார். அவரது இறப்பைத் தொடர்ந்து மீனவர்கள் தொடர்ந்து 8 நாட்கள் மீன் பிடிக்க செல்லா மல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அதிகாரி களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இந்த நிலையில் மீனவர் அமல்ராஜ் வள்ளம் கவிழ்ந்து கடலில் விழுந்தார். ஆனால் அவரைப் பற்றிய தகவல் இது வரை கிடைக்கவில்லை. இந்நிலையில் தேங்காபட்டணம் மீன்பிடி துறை முகத்தை மறு சீரமைப்பு செய்ய வலி யுறுத்தி கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக மீனவர் அமைப்புகள் சார்பில் அறி விக்கப்பட்டது. இதையடுத்து புதனன்று காலை இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த 15 மீனவ கிராம மக்கள் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர். காலை முதல் கொட்டிய மழையை பொருட்படுத்தாமல் உண்ணா விரதத்தில் மீனவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள், பங்கு பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.