தஞ்சாவூர், நவ.6 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மேற்பனைக்காட்டில் இருந்து பிரியும் பாசன வாய்க்கால் சொர்ணக்காடு, வளப்பிரமன்காடு, நெல்லியடிக்காடு, வீரக்குடி வழியாக ரெட்டவயல் பெரிய ஏரியில் சென்று தண்ணீர் கலக்கிறது. இந்நிலையில், வீரக்குடி கிராமத் தில் மண்கொண்டார் தோப்பு அருகில் பாசன வாய்க்காலில் உள்ள, கேணிப்பா லத்தில் தண்ணீர் வடிந்து, அங்கிருந்து பிரிந்து அருகில் உள்ள வயல்களுக்கு பாசனத்திற்கு செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம், இப்பகுதி யில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறு கின்றன. இந்நிலையில், சுமார் 80 ஆண்டுகளைக் கடந்த பழமையான கேணிப்பாலம் கடந்த சில ஆண்டு களாக சிறிது சிறிதாக சேதமடைந்து, தற்போது முற்றிலுமாக சேதம் அடைந் துள்ளது. இதனால், பாசன வாய்க்கால் செல்லும் வழி அடைபட்டு, தண்ணீர் வேறு வழியில் செல்கிறது. அதிக அளவில் தண்ணீர் வந்தால், குடி யிருப்புக்குள் புகும் அபாயம் உள்ளது. இந்நிலையில், இப்பகுதி விவசா யிகள் பொதுப்பணித்துறை செயற்பொ றியாளரிடம் முறையிட்டதை அடுத்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்க ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே செந்தில்குமார், விவசாயிகள் சங்க மூத்த தலைவர் வி.கருப்பையா, விவசாயிகள் சங்கம் கபிலன், மணக் காடு ஊராட்சி மன்றத் தலைவர் எஸ். விஜயகுமார், ஒன்றியக் குழு உறுப்பி னர் அழகுமீனா தங்கப்பா, ஊராட்சி மன்ற உறுப்பினர் சுமதி, சமூக அலுவ லர் வை.ரமேஷ் ஆகியோர் பொதுப் பணித்துறை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அம்மனுவில், “கேணிப் பாலத்தை முற்றிலுமாக இடித்து அகற்றிவிட்டு, புதிதாக அமைத்து தர வேண்டும். பாச னத்திற்கு தண்ணீர் செல்லும் மடையை சரி செய்து தர வேண்டும். சொர்ணக் காடு தொடங்கி ரெட்டவயல் வரை உள்ள வீரக்குடி பாசன வாய்க்காலை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, ஏற்க னவே இருந்த இடங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள சுலுசுகளை சீரமைத்து தர வேண்டும். பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றித் தர வேண்டும். இப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.