தென்காசி,ஜன.2- தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திங்கள ன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தலைமையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நல துறையின் சார்பில் உதவி உபகரணங் கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 4-மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள் ரூ.48,000 மதிப்பிலும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் ரூ.17,000 என மொத்தம் ரூ.65,000 மதிப்பில் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். ேமலும், கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற் படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 371 மனுக்கள் பெறப்பட்டது. இந்தக்கூட்டத்தில் பெறப் பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ள தா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவ டிக்கை மேற்கொண்டு மனு தாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவ லர்களுக்கும் அவர் அறி வுறுத்தினார்.