districts

img

மறியல்-கடையடைப்பு அறிவிப்பு எதிரொலி அணுகுசாலை அமைக்க நெடுஞ்சாலை ஆணையம் உறுதி

விருதுநகர், டிச.27- விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகர் முதல் ஆவுடையாபுரம் விலக்கு வரை அணுகுசாலை அமைக்கப்படும் என நெடுஞ்சா லைத்துறை ஆணையம் உறுதி யளித்தது. இதையடுத்து, வரும் டிச.29-ஆம் தேதி நடைபெற விருந்த கடையடைப்பு-மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. விருதுநகர் -சாத்தூர் நான்கு வழிச் சாலையில் உள்ளது ஆர்.ஆர்.நகர் பகுதி. இதன் அருகே தனியார் சிமிண்ட் ஆலை உள் ளது. அங்கு சரக்கு ரயில்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் மேம் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் மேற்குப் பகுதி யில் மட்டும் அணுகுசாலை அமைக் கப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதி யில் அமைக்கவில்லை. இதன் காரணமாக மேம்பாலத்தில் ஏரா ளமான விபத்துக்கள் நடை பெற்று வருகின்றன. இதுகுறித்து பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஆர்.ஆர்.நகர் பகுதி யில் அனைத்துக் கட்சி நிர்வாகி கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிச.29- ஆம் தேதி கடை யடைப்பு மற்றும் மறியல் போரா ட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டது. இந்த நிலையில், திங்களன்று விருதுநகர் வட்டாட்சியர் அலு வலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், ஆர்.ஆர். நகர் பேருந்து நிறுத்தம் முதல் ஆவுடையாபுரம் விலக்கு வரை அணுகுசாலை அமைக்க ஏற்க னவே மதிப்பீடு தயார் செய்யப் பட்டு நெடு“சாலை ஆணையத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. மேம்பாலத்தின் மேற்குப் பகுதியில் பழுது ஏற்பட்டு பராம ரிப்பு பணிகள் நடைபெற்றதால் காலதாமதம் ஏற்பட்டது. 2022- ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் நிரந்தரமாக தார் சாலை அமைக் கும் பணி தொடங்கப்படும். அதற்கு முன்பு, தார்க் கலவை மூலம் தற்காலிக சாலை அமைக் கும் பணி டிச.,28-ஆம் தேத் தொடங்கப்படும் என அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில், திமுக சார்பில் தேவராஜ், சிபிஎம் தெற்கு ஒன்றியச் செயலாளர் பி.நேரு, சிபிஐ ஒன்றியச் செயலாளர் வி. பாலமுருகன், ஊராட்சிமன்றத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.