districts

img

மதுரை மாநகராட்சி வார்டுகளில் சிபிஎம் வேட்பாளர்கள் வாக்குச்சேகரிப்பு

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதுரை மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் நிறைவு பிரச்சார நாளான பிப்ரவரி 17 வியாழனன்று கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்த னர். பெத்தானியாபுரம் 63 வது வார்டில் திமுக வட்டச் செயலாளர் நாகராஜ் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம்,சிபிஎம் வேட்பாளர் கு. கணேசனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரத்தை துவக்கிவைத்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா. லெனின், எஸ். அழகர்சாமி, வார்டு பொறுப்பாளர் வி. ராமர், திமுக நிர்வாகிகள் ஆசைதம்பி, ஏட்டு ராஜா, காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.