விருதுநகர், ஜன.17- விருதுநகர் மாவட்டம் சேத்தூரில் மிகவும் ஏழ்மை யான நிலையில் உள்ள தாய், மகன் மற்றும் மகளுக்குத் தேவையான உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேக நாதரெட்டி வழங்கினார். சேத்தூரைச் சேர்ந்தவர் குருபாக்கியம் (39 ). கணவ ரால் கைவிடப்பட்ட இவருக்கு ரமேஷ் (15), மகாலட்சுமி (8) என இரு குழந்தைகள் உள்ள னர். குருபாக்கியத்திற்கு நரம்பி யல் கோளாறு காரணமாக அடிக் கடி வலிப்பு நோயால் பாதிக்கப் படுகிறார். இதன் காரணமாக எந்த வேலையும் இவரால் செய்ய இயலவில்லை. வாடகை வீட் டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்போது வீட்டு வாடகை செலுத்தவும், மருத் துவ செலவு, குடும்பத்திற்கு தேவையான வாழ்வாதாரம், உணவிற்கு கூட வழியில்லாத நிலைக்கு தள்ளப்பட்டார். இது குறித்து செய்திகள் வெளியா கின. இதையடுத்து, ஆட்சியர், குருபாக்கியம் குடும்பத்தினரை நேரில் சென்று குடும்பச்சூழல் குறித்து கேட்டறிந்தார். பின்பு அவருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ரூ. 15,000, கணவரால் கைவிடப் பட்டவருக்கான மாத உதவித் தொகை ரூ.1000 பெறுவதற் கான ஆணை மற்றும் குடும்ப அட்டை, அவரது மகன் ரமேஷ் படிப்பிற்காக கைப்பேசி, மக ளுக்கு பள்ளி படிப்பிற்கு தேவை யான புத்தகப்பை, மூன்று மாதத்திற்கான மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார்.