திண்டுக்கல். செப்.8 திண்டுக்கல் இலக்கியக் களம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் 10-வது புத்தகத் திருவிழாவை யொட்டி பள்ளி கல்லூரிகள் தோறும் திண்டுக்கல் வாசிக்கிறது இயக்கம் நடைபெற்றது. திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி யில் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவையொட்டி மாணவ, மாணவி கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், “திண்டுக்கல் வாசிக்கிறது” வாசிப்பு இயக்கம் முன்னெடுக் கப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம், அரசு அலுவலகங்கள், பள்ளி- கல்லூரிகளில் வாசிப்பு இயக்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு திண்டுக்கல் இலக்கியக் களத்தின் துணைத்தலைவர் முனைவர் மு.சர வணன், ஏற்பாடு செய்திருந்தார். வாசிப்பு இயக்கத்தில் இலக்கியக்களத்தின் தலைவர் பேராசியர் ஆர்.மனோகரன், செயலாளர் எஸ்.இராமமூர்த்தி, பொருளாளர் பேராசிரியர். மணிவண்ணன், நிர்வாகச் செயலாளர் எஸ்.கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.