விருதுநகர், மார்ச் 19- விவசாயப் பணிகளில் பிற மாவட் டங்களைப் போல 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டும். அதற்கான பிரச்சாரத்தை விவசாயத்துறை அதிகாரிகள் செய் திட வேண்டுமென தென்காசி தொகுதி எம்.பி தனுஷ் எம்.குமார் வேண்டு கோள் விடுத்துள்ளார். விருதுநகரில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப் புக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையேற் றார். விருதுநகர் தொகுதி எம்.பி ப. மாணிக்கம் தாகூர், தென்காசி தொகுதி எம்.பி தனுஷ் எம்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில், திட்ட இயக்குநர் திலகவதி, சிவகாசி மாநகராட்சி மேயர் உட்பட அரசு அதி காரிகள் பலர் பங்கேற்றனர். அப்போது நடைபெற்ற விவாதத் தில், தற்போது சமூக வலைதளங்க ளில் பயன்பாடு அதிகரித்து உள்ளது. அரசு சார்பில் நடைபெறும் பணிகளை மிகவும் உன்னிப்பாக பலர் கவனித்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை பகு தியில் நடைபெற்ற சாலைப் பணியை தரமற்றதாக உள்ளது என சமூக வலை தளத்தில் பதிவிட்டனர். அதுகுறித்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. பின்பு, நான் நேரடியாக அந்த இடத்தை ஆய்வு செய்தேன். அதன் பிறகு, விமர்சனங்கள் குறைந்தது. எனவே, நாம் எச்சரிக்கையாக வேலை செய்ய வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள பல பேருந்து நிறுத்தங்களில் குப்பைகள் அதிகமாக உள்ளது. அதை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென வும் உத்தரவிட்டார். பின்பு, மாதிரி கிராமங்களாக தேர்வு செய்யப்பட்ட இரு கிராமங்க ளில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் இத்திட்டம் சிறப் பாக இருக்குமா? என்ற கேள்வி இருந் தது. அரசு அலுவலர்களுடன் சென்று நடைபெற்ற பணிகளை பார்க்கும் போது தான் எவ்வளவு பணிகள் நடை பெற்றுள்ளது என அறிய முடிகிறது என விருதுநகர் தொகுதி எம்.பி ப. மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். தென்காசி மாவட்டத்தில் வயல் களில் வரப்பு கட்டும் பணியில் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் ஈடு படுகின்றனர். ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் விவசாயப் பணிகளில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலா ளர்கள் ஈடுபடாதது ஏன்? என வேளா ண்மைத்துறை அதிகாரிகளை பார்த்து தென்காசி எம்.பி தனுஷ் எம்.குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வேளாண் அதி காரி, விருதுநகர் மாவட்டத்தில் குழி தோண்டுதல், மரக் கன்று நட்டு பரா மரிக்கும் பணியை 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் செய்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய தனுஷ் எம்.குமார், ‘‘விவசாயிகளிடம் இது குறித்து பிரச்சாரம் செய்யுங்கள். ஒவ்வொரு ஊராட்சித் தலைவரிடமும் இத்திட்டம் குறித்து தெரிவியுங்கள். மேலும் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு விளம்பரம் செய்யுங்கள். விவசாயப் பணிகள் அதிகமாக நடைபெற்று வரும் வத்திராயிருப்பு, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் ஆகிய வட்டங்க ளில் உள்ள விவசாயிகளுக்கு இது பய னுள்ளதாக இருக்கும்’’ என தெரி வித்தார். மேலும், நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் நடைபெறும் மல்லாங்கிணறு பேரூராட்சியில் இத்திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த செயல் அலு வலர், மல்லாங்கிணறு பேரூராட்சி யில் மொத்தமுள்ள சுமார் 4,700 குடும் பங்களில் 2,782 பேர் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறவுள்ளனர். ஒரு குடும்பத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படவுள்ளது என விளக்கம ளித்தார். இவ்வாறாக விவாதம் நடைபெற் றது. மேலும் இதில், புதிதாக தேர்ந் தெடுக்கப்பட்ட நகராட்சி மற்றும் பேரூ ராட்சி தலைவர்கள், ஒன்றிய சேர்மன் கள் உட்பட பலர் பங்கேற்றனர்.