அருப்புக்கோட்டை, ஜூன் 6- உயர் நீதிமன்ற உத்த ரவை மீறி கண்மாய் கரையில் செல்லும் தனியார் கல் குவாரி வாகனங்களை தடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அருப்புக்கோட்டை வட்டம், புலியூரான் ஊரா ட்சிக்கு உட்பட்டது பன்னிக் குண்டு கிராமம். இங்குள்ள கண்மாய் கரையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கனரக வாகனங்கள் வணிக நோக்கத்தோடு சென்று வரு கின்றன. தனியார் கல்குவாரி வாகனங்கள் 40 டன், 50 டன் கற்களை ஏற்றிக்கொண்டு செல்வதை தடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஊர் பொது மக் கள் இணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி னர். இதுகுறித்து விவசாயி கள் குறைதீர் கூட்டத்திலும் பலமுறை புகார் செய்யப் பட்டது. ஆனால், மாவட்ட நிர்வா கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உட னடியாக உயர்நீதிமன்ற உத் தரவை அமல்படுத்த வேண் டும். கண்மாய் கரையில் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, அருப்புக் கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போராட்டம் நடைபெற் றது. இப்போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எம். கணேசன் தலைமையேற் றார். ராபர்ட், ராமச்சந்திரன், பிரேம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். துவக்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக் குமார் பேசினார். முடிவில் மாவட்ட செயலாளர் கே. அர்ஜூனன் கண்டன உரை யாற்றினார்.
தடுப்புக் கற்களை ஊன்ற ஒப்பந்தம்
தகவலறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை வட் டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். முடிவில், பன்னி குண்டு கண் மாய் கரையில் கனரக வாக னங்கள் செல்லக்கூடாது. நீர் வரத்து பாதையை மறித்து அமைக்கப்பட்ட ஓடையை சீர் செய்ய வேண்டும். மடை யை சரி செய்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அரசு நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. மேலும், செவ் வாயன்று உடனடியாக கண்மாய் கரையில் கனரக வாகனங்கள் செல்ல முடி யாத அளவிற்கு தடுப்பு கற் களை ஊன்றுவது எனவும் ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும் இதில் ஊராட்சி சார்பில் சத்தியன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வி.முருகன், எம்.தாமஸ், மாவட்டக்குழு உறுப்பினர் அன்புச்செல்வன், திருச்சுழி ஒன்றிய செயலாளர் மார்க் கண்டன், இடைக்குழு உறுப்பினர்கள் காமாட்சி நாதன், சுரேஸ், மற்றும் கோணப்பனேந்தல் புலி யூரான் பன்னிக்குண்டு கிரா மத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண் டனர்.