திண்டுக்கல், செப்.1- திண்டுக்கல் சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் செல்வ நாயகத்தின் தொடர் முயற்சி யின் பலனாக திண்டுக்கல் ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மும்முனை மின்சாரம் வழங்க மின்வா ரிய மற்றும் மனுக்கள் குழு அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். திண்டுக்கல் செட்டிநா யக்கன்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட ஆலக்குவார்பட்டி, அம்பேத்கர் நகர், கள்ளிப் பட்டி நெசவாளர் காலனி, தாய் மூகாம்பிகை நகர் பகுதிகளில் குறைந்த அழுத்த மின்சாரம் வழங் கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இது தொடர்பாக சிபிஎம் ஒன்றியக் கவுன்சிலர் என்.செல்வநாயகம், திண்டுக்கல் நகருக்கு மனுக்கள் குழு வருகையையொட்டி மின் அழுத்தம், சீரற்ற மின்சார விநியோகத்தை மாற்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரி மனு அளித்தார். மனு குறித்து திண்டுக் கல் மின் பகிர்மான வட்ட வடக்கு செயற்பொறியாளர் வே.பு.முத்துக்குமார் அளித் துள்ள பதிலில், ‘‘தாய் மூகாம்பிகை நகர் மின்மாற்றி மூலம் முனியப்பன் கோவில் அருகேயுள்ள 13 வீடுகளில் குறைந்த மின் அழுத்தம் கண்டறியப்பட்டது. இது குறித்து ஏற்கனவே ஆய்வு செய்த போது, 197 வோல்ட் மின்சாரம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. அது சரி செய்யப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப் படுகிறது. தற்போது சிபிஎம் கவுன்சிலர் செல்வநாயகம் முன்னிலையில் ஆய்வு செய்த போது, 232 வோல்ட் மின்சாரம் வழங்கப்படுவது தெரிய வருகிறது. எனவே இதனையும் சரி செய்து தடை யில்லா சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஆர்.டி.எஸ்.எஸ். சிறப்பு திட்டத்தின்படி ஆலக்குவார்பட்டி, அம்பேத் கார் காலனி, கள்ளிப்பட்டி நெசவாளர் காலனி, பகுதிக ளில் புதிதாக மின்மாற்றிகள் அமைத்து தடையில்லாத மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. அதே போல் ஆலக்குவார் பட்டியில் உள்ள இம்மானு வேல் சேகரன் குடியிருப்பு பகுதியில் வீடுகளுக்கு மேல் செல்லும் மின் கம்பிகளை அகற்ற உரிய டி.சி.டபுள்யு விண்ணப்பம் மூலம் உரிய மதிப்பீடு ஒப்புதல் பெற்று மதிப்பீடு தொகை செலுத்தும் பட்சத்தில் மாற்றி அமைக் கப்படும்’’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.