districts

img

நெல்லை பாபநாசம் சாலை பணிகளை விரைவு படுத்த ஆட்சியரிடம் சிபிஎம் கோரிக்கை

திருநெல்வேலி ,செப் .27- நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வை செவ்வாய்க்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் கேஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் ஸ்ரீ ராம், அம்பை ஒன்றிய செயலாளர் ஜெகதீஷ், விகேபுரம் நகர குழு செயலாளர் இசக்கி ராஜன் ஆகியோர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சி ஸ்ட்)அம்பாசமுத்திரம் ஒன்றியம் மற்றும் வி.கே.புரம் நகர கமிட்டிகளின் சார்பில் தங்கள் முன் வைக்கும் கோரிக்கை யாதெ னில். திருச்செந்தூர் - பாபநாசம் சாலை விரிவாக்கப்பணிகள் கடந்த ஆண்டு, துவங்கப்பட்டு நெல்லை-பாபநாசம் சாலை ஆங்காங்கே தோண்டப்பட்டதோடு கடந்த 4 மாதங்களாக எவ்வித பணிகளும் நடைபெறாமல் அரைகுறையாக நிறுத்தப் பட்டுள்ளது.இதனால் ஏற்படும் புழுதி கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துவதோடு மேடு பள்ளமான சாலையில் பயணிப்போர்களுக்கும் மக்க ளுக்கும், வியாபாரிகளுக்கும்,  வேலைக் காக தினமும் பயணிப்போருக்கு கடும் முதுகு வலி ஏற்படுகிறது.

மோசமான இந்தச் சாலையில் அவசர மருத்துவ சிகிச்சைக் காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்க ளில் செல்லும் நோயாளிகள், குறித்த நேரத்தில் பாதுகாப்பாக செல்ல முடியாத சூழலும், இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு முற்றிலும் பாதுகாப்பற்ற நிலையும் உள்ளதோடு தினம் சில விபத்துக்களும் ஏற்படுகிறது. விபத்து ஏற்படுத்தும் பாதிப்புகளும், உயிரிழப்புக ளும் அந்த குடும்பங்களுக்கு எத்தனை துய ரங்களைக் கொடுக்கும் என்பது தாங்கள் அறியாததல்ல. மேலும் இந்தச் சாலையை பயன் படுத்தும் அரசு மற்றும் தனியார் வாக னங்கள் அடிக்கடி பழுதடைவதால் பெரும் பொருளிழப்பு ஏற்படுவதுடன் அன்றாட வேலைகளும் பாதிக்கப்படுகிறது.இந்த சாலைப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ள அல்லது தாமதப்படுத்தப்படுவதால் அனு தினமும் இந்தச் சாலையை பயன்படுத் தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவது எவ்வகையிலும் ஏற்பு டையதல்ல. மக்களின் துயரங்களுக்கு சாலை ஒப்பந்ததாரரும் அரசுமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.மேற்சொன்ன சாலைப் பிரச்சனைகளின் தீவிரம் உணர்ந்து, இனியும் மக்கள் துயர் தொட ராமல் இருந்திட தாங்கள் விரைந்து நட வடிக்கை மேற்கொண்டு நிறுத்தப்பட்டுள்ள நெல்லை-பாபநாசம் சாலைப்பணிகளை உடனடியாக தொடங்கிட ஆவண செய்ய வேண்டுமென பொதுமக்கள் சார்பிலும் சிபிஎம் அம்பாசமுத்திரம் ஒன்றியம் மற்றும் வி.கே.புரம் நகரக் கமிட்டிகள் சார்பிலும் தங்களை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டி ருந்தது.

;