திருவட்டார், டிச.23 கன்னியாகுமரி மாவட் டம் திருவட்டார் அருகே அருவிக்கரை ஊராட்சி பகுதி பழுதடைந்த கோழி விளை -மாத்தூர்- மணக்குன்று சாலையைசெப்பனிட நெடுஞ்சாலை துறையை வலியுறுத்தி கோழி விளை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கட்சி கிளை செயலா ளர் கிரேசி தலைமை தாங்கி னார். மாநில குழு உறுப்பி னர் ஆர். லீமாறோஸ் துவங்கி வைத்தார். வட்டார செயலாளர் ஆர். வில்சன், மாவட்ட குழு உறுப்பினர் கள் ஆர். ரவி. சகாய ஆன் றனி, வட்டார குழு உறுப்பினர் சோபிதராஜ் ஆகியோர் பேசி னார்கள். வார்டு உறுப்பினர் டெய்சி உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.