districts

img

மக்கள் விரோத ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மதுரை, மார்ச் 1-  மக்கள் விரோத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள ஒன்றிய மோடி அரசைக் கண்  டித்தும் புதிய வேலை வாய்ப்பு திட்டங்களை  உருவாக்கிட வேண்டும். 100நாள் வேலைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கட்சியின் மதுரை கிழக்கு தாலுகா குழு சார்பில் யா.ஒத்தக்கடையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகாக்குழு உறுப்பி னர் தலைமை வகித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் பா.ரவி, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி, தாலுகாச் செயலாளர் எம்.கலைச்செல்வன் ஆகி யோர் பேசினர்.  வாடிப்பட்டியில் ஒன்றியக் குழு உறுப்பி னர் சின்னச்சாமி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். பி.இளங்கோவன், ஒன்றி யச் செயலாளர் ஏ.வேல்பாண்டி ஆகியோர் பேசினர்.  மேலூர் பேருந்து நிலையம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலு காக்குழு உறுப்பினர் ஏ.தனசேகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் .மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன் ஆகியோர் பேசினர்.  மேற்கு ஒன்றியக் குழு சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அய்யர்பங்களா கிளைச் செயலாளர் செ.ஆஞ்சி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்  பா.ரவி, ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந் தம் ஆகியோர் பேசினார்.  வண்டியூர் மந்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பி னர் ஏ.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பி. இளங்கோவன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி, தாலுகாச் செயலாளர் எம். கலைச்செல்வன் ஆகியோர் பேசினர்.  உசிலம்பட்டியில் ஒன்றியச்செயலாளர் பெ.ராமர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஏ.இளங்கோவன் பேசினார். சோழவந்தா னில் கிளைச் செயலாளர் குருசாமி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்  டச் செயலாளர் கே.ராஜேந்திரன் ,ஒன்றியச் செயலாளர் ஏ. வேல்பாண்டி ஆகியோர் பேசினர்.   விக்கிரமங்கலத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.ஆர்.ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, ஒன்றியச் யலாளர் வி.பி.முருகன் ஆகியோர் பேசினர்.
மதுரை மாநகர்
கட்சியின் மதுரை மாநகர் வடக்கு - 2,  மத்திய - 1 ஆம், தெற்கு பகுதிக்குழுகள் சார் பில் பட்ஜெட்டை கண்டித்து தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு - 2 ஆம் பகுதிக்குழு சார்பில் புதூர் பேருந்து நிலையத்தில் பகுதிக்குழு உறுப்பினர் எஸ். சரவணகுமார் தலைமை யில் நடைபெற்றது.மாவட்டச் செயலாளர் மா.கணேசன் ,மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜா. நரசிம்மன், பகுதிக்குழு செயலாளர் ஏ. பாலு ஆகியோர் பேசினர்.  மத்திய -1 ஆம் பகுதிக்குழு சார்பில் எல்லீஸ் நகர் கருமாரியம்மன் கோயில் அருகில் கிளைச் செயலாளர் பாக்கியநாதன் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. வசந்தன், எம். பாலசுப்பிரமணியன், பகு திக்குழு செயலாளர் வை.ஸ்டாலின் ஆகி யோர் பேசினர்.  தெற்கு பகுதிக்குழு சார்பில் பகலவன் நகர் பிரேம் பள்ளி அருகில் கிளைச் செயலா ளர் வி.சகாயராஜ் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரமேஷ்,பகுதிக்குழு செயலா ளர் ஜெ.லெனின் ஆகியோர் பேசினர்.  வடக்கு - 2 ஆம் பகுதிக்குழு சார்பில் புதூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்திற்கு பகுதிக்குழு உறுப்பி னர் எஸ். சரவணகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.லெனின், பகு திக்குழுச் செயலாளர் ஏ. பாலு ஆகியோர் பேசினர்.
இராமநாதபுரம்
. இராமநாதபுரம் மாவட்டம் திரு வாடானையில் தாலுகா செயலாளர் கே ஜெயகாந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் என்.கலையரசன், எம்.முத்துராமு, அஞ்சுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் வி.பூபாலன் ஆகியோர் பேசினர்
விருதுநகர் 
விருதுநகர் பாத்திமாநகரில் சகாயராஜ் தலைமையில் மூத்த தலைவர்கள் எஸ்.பாலசுப்பிரமணியன், தேனிவசந்தன், நகர் செயலாளர் எல்.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிவகாசியில் நகர் செயலாளர் ஆர். சுரேஷ்குமார் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா,  ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிரமணி யன் ஆகியோர் விளக்கிப் பேசினர்.  மல்லாங்கிணறில் செல்வம் தலைமை யில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். முத்துக்குமார், வட்ட செயலாளர் ஏ.அம் மாசி, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் பி.ராமர் ஆகியோர் பேசினர். சாத்தூரில் நகர் செயலாளர் பி.பெத்த ராஜ் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.விஜயமுருகன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.விஜயகுமார். ஒன்றிய செயலாளர் எஸ்.சரோஜா ஆகியோர் விளக்கிப் பேசினர். அருப்புக்கோட்டையில் நகர் செயலா ளர் எஸ்.காத்தமுத்து தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.தாமஸ், மாவட்டக்குழு உறுப்பினர் பி.அன்புச் செல்வன், ஒன்றிய செயலாளர் எம்.கணே சன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். திருவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் ஜெயக்  குமார் தலைமை வகித்தார். மாநில செயற் குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் சிறப்பு ரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் முருகன் பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் கண்டர மாணிக்கம், இளையான்குடி, தேவ கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேவ கோட்டையில் நகர் செயலாளர் அஜீஸ்கான்  தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்புச்சாமி, சுரேஷ், தாலுகா செயலாளர் செல்வம் ஆகியோர் பேசினர். இளையான்குடியில் தாலுகா செய லாளர் ராஜீ தலைமை வகித்தார். மாவட்ட  செயலாளர் தண்டியப்பன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி ஆகி யோர் பேசினர். கண்டரமாணிக்கத்தில் தாலுகா செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன் பேசினார்.

;