இராஜபாளையம், அக்.11- நியூஸ் கிளிக் இணைய இதழ் ஆசிரியரை கைது செய்துள்ள ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இராஜபாளை யத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் அர்ஜூ னன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் ராமர், மூத்த தோழர் கணேசன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் முனியாண்டி, மேற்கு ஒன்றியச் செயலாளர் சந்தனகுமார், திக தலைமை கழக அமைப்பாளர் திருப்பதி, சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ரவி, நகரச் செயலாளர் விஜயன், மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் பாண்டுரங்கன், நகர செய லாளர் மதியழகன், விசிக தொகுதி செயலாளர் சரவணன், விசிக நகர செயலாளர் ராஜேஸ்வரன், முஸ்லிம் லீக் நகர தலைவர் முகமது ரபீக் சுதாகர், மாவட்டத் தலைவர் லீயாவுதீன், காங்கிரஸ் நிர்வாகி பால்கனி உட்பட பலர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.