தென்காசி, செப்.1- ஆங்கில ஏகாதிபத்தியத் தை எதிர்த்து முதல் முழக்க மிட்ட மாவீரன் பூலித்தேவன் 307ஆவது ஜெயந்தி விழா வை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெல்கட்டும் செவ லில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணி விக்கும் நிகழ்ச்சி வியாழ னன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி மாவட்டக் குழு செயலாளர் உ.முத்துப்பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பா.அசோக் ராஜ், பி.உச்சிமாகாளி மற்றும் மூத்த தோழர் மருதையா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தென்காசி மாவட்டக் குழு செயலாளர் வழக்கறிஞர் பி.கிருஷ்ண மூர்த்தி, வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலாளர் நட ராஜன் மற்றும் வாசு கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.