மதுரை, ஏப்.8- தமிழ்நாடு அரசு, மாநகராட்சி கள், நகராட்சிகள் மற்றும் பேரூ ராட்சிகளில் உள்ள வீடுகள் மற் றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 25 சதம் முதல் 150 சதம் வரை சொத்துவரியை உயர்த்தி அறி விப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கான காரணத்தை தெரி விக்கும்போது ஒன்றிய அரசு - உள்ளாட்சி அமைப்புக்களில் ஒன் றிய அரசின் திட்டங்களின் கீழ் உதவிகள் பெற வேண்டுமெனில் அனைத்து மாநகராட்சிகள், நக ராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்துவரியை உயர்த்தி அறி விக்க வேண்டுமென தெரிவிக்கப் பட்டுள்ளதாக கூறியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறி விப்பானது அநியாயமானது மட்டுமின்றி மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் உரி மைகளில் தலையிடுவது ஆகும். ஒன்றிய அரசு அறிவிக்கும் திட் டங்களை நிறைவேற்றுவதற்கு - ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண் டுமே தவிர, அதற்காக சொத்து வரியை உயர்த்த வேண்டுமென முன்நிபந்தனை வைப்பது சரி யல்ல. அதேசமயம், கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சிறு - குறுந் தொழில்கள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. கட்டுமானம் முதல் அனைத்து தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு வேலையி ழப்பு ஏற்பட்டுள்ளது. மக்களது வாழ்நிலை கடுமையாக பாதிக் கப்பட்டு, தற்போது தான் நிலைமை சீரடைந்து வருகிறது. இந்நிலையில், தமிழக அர சின் சொத்துவரி உயர்வு அறி விப்பு என்பது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். சாதாரண உழைப் பாளி மக்கள் வீட்டு வாடகை உயர்வு என்ற பாதிப்புக்கு உள் ளாக நேரிடும். எனவே, தமிழ்நாடு அரசு - மதுரை மாநகராட்சி நிர்வா கம் தற்போது அறிவித்துள்ள சொத்து வரி உயர்வினை மறுபரி சீலனை செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் தலைமை யில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜா.நரசிம்மன், அ.ரமேஷ், மாமன்ற உறுப்பினர்கள் நா. விஜயா, டி.குமரவேல், வை. ஜென்னியம்மாள் ஆகியோர் மாநகராட்சி ஆணையாளர் க.பா. கார்த்திகேயனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.