மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விஜய் ராம்ஜி கபானே போட்டியிடுகிறார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான அவர், நான்டெட் மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். இந்தத் தொகுதியில் 2014 ஆம் ஆண்டிலும் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகுதியில் ஏப்ரல் 26 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பிரச்சாரத்தைத் தொடங்கும் வகையில், கட்சியின் 100 ஊழியர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடந்தது. பிரச்சாரத்திற்கான உத்திகள், முன்னிறுத்த வேண்டிய பிரச்சனைகள் பற்றி கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தவாலே விளக்கிப் பேசினார். அதைத் தொடர்ந்து பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.