districts

img

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் காட்டன் ஆடைகள் கண்காட்சி

மதுரை, டிச.27- மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் காட் டன் ஆடைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடை பெறுகிறது.      இக்கண்காட்சியில், பல்வேறு பட்டுச் சேலை நெசவாளர்கள், கைத்தறி அமைப்புகள் மற்றும் பட்டுக் கூட்டுறவு சங்கங்களும் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்கின்றனர், நெச வாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கும் வாடிக்கை யாளர்களுக்கும் இடையே இடைத்தரகர்கள் இல்லா மல், தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் நேரடியாக அணுகி வாங்க வழி செய்வதே இந்த அமைப்பின் நோக்கமாகும்” என்று அமைப்பாளர் ஜாவித் கூறினார்.  “ஆரணி பட்டுச் சேலைகள், கிரேப் மற்றும் ஜார்ஜெட் சில்க் சேலைகள், ஷிபான் சில்க் சேலை கள், டஸர் சிலக் சேலைகள் மற்றும் சூட், காஞ்சீவரம் பட்டுச் சேலைகள் மற்றும் கல்யாண சேலைகள், டிசைனர் பேன்சி சேலைகள், தர்மாவரம் பட்டுச் சேலை கள், ராசிலக் மற்றும் டஸர், ஜூட் சில்க் சேலைகள், தாக்கா சில்க் சேலைகள், கைத்தறி சிலக் காட்டன் சேலைகள், சில்க் பிளென்ட் சேலைகள் மற்றும் மேலாடைகள், சிலக் ஷால்கள், உப்படா , கத்வால், பைத்தானி சேலைகள், மங்களகிரி மற்றும் போச் சம்பள்ளி பட்டுச் சேலைகள் மற்றும் நாடு முழுவதிலி ருந்தும் பலவகையான தயாரிப்புகள் இந்தப் பட்டுக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன” என்று கூறினார்.  மேலும் விவரங்களுக்கு 9884446747 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறும்.