districts

img

மதுரை தமுக்கத்தில் மாநாட்டு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரை, செப்.9- சீர்மிகு மதுரை திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பன்னடுக்கு வாகன காப்பகம், தமுக்கம் மைதானத்தில் மதுரை மாநாட்டு மையம் ஆகியவைகளை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் செப் டம்பர் 8 வியாழனன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ். ராஜேந்திரன், ராஜ கண் ணப்பன், தங்கம் தென்னரசு,  மாநகராட்சி மேயர் வ. இந்திராணி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், துணை மேயர் டி. நாகராஜன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.

பன்னடுக்கு வாகன நிறுத்தம் 
உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ் வரர் திருக்கோவில் அருகே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திடவும் , திருக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்று லாப் பயணிகள் தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்திட ஏதுவாக மதுரை மாநகராட்சி மூலம் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ .41.96 கோடி மதிப்பீட்டில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது . இதில் தரைமட்டத்திற்கு கீழ் 2 தளங்கள், தரைமட்டத்திற்கு மேல் 2 தளங்கள் என மொத்தம் 69575 ச.மீ பரப்பளவில் 4 தளங்க ளாக அமைக்கப்பட்டுள்ளது . தரைதளத்தி ற்கு கீழுள்ள 2 தளங்களில் சுமார் 110 நான்கு சக்கர வாகனங்கள் , 1400 இருசக்கர வாகனங் கள் சிரமமின்றி நிறுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது .  வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக தரை தளத்தில் தகவல் மையம் மற்றும் மதுரை மாநகரின் கலாச்சார பெருமைகளை பறை சாற்றும் வகையில் புராதன சின்னங்கள் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.  மாதாந்திர வாடகை அடிப்படையில் 128  கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது . மேலும், கண்காணிப்பு கேமிராக்கள் . போதிய மின் விளக்கு வசதிகள் , குடிநீர் வசதி , கழிப்பறை வசதிகள், தீத் தடுப்பு பாதுகாப்பு வசதிகள், அவசரகால வெளியேறும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

மதுரை மாநாட்டு மையம் 
மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான தமுக்கம் மைதானத்தில் ( 9.68 ஏக்கர் பரப்ப ளவு) ஏற்கனவே சேதமடைந்திருந்த கலைய ரங்க கட்டடத்தினை அகற்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ .47.72 கோடி மதிப்பீட்டில் 10082 ச.மீ பரப்பளவில் நவீன வசதிகளுடன் புதிய “மதுரை மாநாட்டு மையம் “ அமைக் கப்பட்டுள்ளது. இம்மையம் 3500 நபர்கள் வரை சிரமமின்றி அமர்ந்து பங்கு கொள்ளும் வகையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி அரங்கும், 800 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் வகை யில் சமையல் அறையுடன் கூடிய உணவு அருந்தும் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மையத்தில் நடைபெறும் விழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு நவீன நகரும் தடுப்பான்களை கொண்டு பல்வேறு அளவில் உள்அரங்கை தேவைக்கேற்ப மாற்றி அமைக்கும் வசதி யும் உள்ளது . இம்மையத்தில் தரைதளத் தின் கீழுள்ள தளத்தில் சுமார் 250 நான்கு சக்கர வாகனங்கள் . 215 இருசக்கர வாக னங்கள் நிறுத்தும் வகையில் விசாலமான வாகன நிறுத்துமிட வசதியும் உள்ளது.

;