districts

img

சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் ஆட்சியரகம் முற்றுகை

விருதுநகர், மே 9- பயணிகள் ஆட்டோக்களை இயக்கிட 30 கி.மீ தூரம் அனுமதி உள்ளது. ஆனால்,வட்டாரப் போக்குவரத்து அலுவலர்,  உண்மைக்கு புறம்பாக எல்லை தாண்டி ஆட்டோவை இயக்கிய தாக அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். உயர்நீதிமன்ற உத்த ரவுப்படி மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். அரசின் ஆட்டோ செயலியை தாமதமின்றி துவங்கிட வேண்டும். புதிய மோட்  டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்  தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு-ஆட்டோ தொழிலா ளர் சங்கம் சார்பில் விருதுநகர் ஆட்சியரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வி.மகேந்திரகுமார் தலை மையேற்றார். மாவட்ட பொருளா ளர் வீரசதானந்தம் முன்னிலை வகித்தார். சாலைப் போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாவட்ட  செயலாளர் எம்.திருமலை துவக்கி வைத்தார். முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் பி.என்.தேவா  கண்டன உரையாற்றினார். மேலும் இதில், சிஐடியு மாவட்ட நிர்வாகி கள் ஆர்.பாலசுப்பிரமணியன், பி. ராமர் உட்பட பலர் பங்கேற்றனர். சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்  ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும். அனுமதி பெறாமல் இயங்குகிற பைக் டாக்சி முறையை ரத்து செய்ய வேண்டும். சிவகங்கை ஆர்டிஒ அலுவலக புரோக்கர்களின் அத்து மீறலை தடுக்க வேண்டும் என்று  வலியுறுத்தி சிவகங்கை அரண் மனை வாசல் அருகே நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்  டத் தலைவர் கருப்பு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் சேதுராமன், ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார், மாவட்ட பொரு ளாளர் குமாரவேல், அரசு போக்கு வரத்துக் கழக மண்டல பொதுச் செயலாளர் தெய்வீரபாண்டியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பேசி னர்.