மதுரை, ஜன.7- மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும் முன்னாள் தாலுகா செயலாளரும், மாடக்குளம் பேரூ ராட்சி முன்னாள் துணைத் தலை வரும், புதுயுக வாலிபர் திரேக பயிற்சி சாலை டிரஸ்டியுமான வி.கே.பழனி அவர்களின் 96 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி புது யுக வாலிபர் திரேக பயிற்சி சாலை யில் வெள்ளியன்று கொண்டா டப்பட்டது. நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற் குழு உறுப்பினர் மதுக்கூர் ராம லிங்கம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட் டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி. ராமகிருஷ்ணன், எஸ்.ஏ.பெரு மாள், இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஜா.நரசிம்மன், டி.செல்வா, வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் பி.கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரி வித்தனர்.