districts

மதுரை முக்கிய செய்திகள்

சிறப்பு பள்ளி,  காப்பகங்களை ஆய்வு செய்க! மாற்றுத்திறனாளிகள் சங்கம் புகார்

தேனி, மார்ச் 28- சிறப்பு பள்ளி ,காப்பகங்களை ஆய்வு செய்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என தேனி ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனாவை நேரில் சந்தித்து  மாற்றுத்திறனாளிகள் சங்க  நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்  உரிமைகளுக்கான சங்க மாநிலச்  செயலாளர் பகத்சிங், தேனி மாவட்ட அமைப்பாளர் டி.நாகராஜ், மாவட்ட பொறுப்பாளர் வெண்மணி, கிளை  நிர்வாகிகள் ரங்கேஸ்வரன், மீனா உள்ளிட்ட நிர்வாகிகள்  மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்கி  தீர்வு காண வேண்டும். அரசு விழாக்களில் செய்கை மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பதை  உறுதி செய்ய வேண்டும் .பிற மாவட்டங்க ளில் நடைபெறும்  மாற்றுத்திறனாளிக்கான சுயவரம் நிகழ்ச்சியை மாவட்ட  நிர்வாகம் சார்பில் நடத்த வேண்டும். தேனி மாவட்டத்தில் செயல்படும் சிறப்பு பள்ளிகள் மற்றும்  காப்பங்களை அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வரும் மாற்றுத்திறனாளி களுக்கு உணவு வழங்க வேண்டும். அனைத்து திரைய ரங்குகளில் மாற்றுத்திறனாளிக்கான வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

பெரியகுளத்திலிருந்து அரசு  மருத்துவக்கல்லூரிக்கு பேருந்து இயக்கிடுக! விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை

தேனி, மார்ச் 28- பெரியகுளத்திலிருந்து வடுகபட்டி, ஜெயமங்கலம் வழி யாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பேருந்து சேவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது .கூட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் ,கா .தமிழன் ,கோமதி  ஆனந்த ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சருத்துப்பட்டி ஊராட்சிக்கு சமுதாய கூடம், பயணியர் நிழற்குடை அமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு ,நிதியும் ஒதுக்கப்  பட்ட நிலையில் தற்போது வேறு இடத்திற்கு நிதி மாற்றப்  பட்டுள்ளது. இந்த நிதியாண்டில்  சமுதாய கூடம்  மற்றும் பய ணியர் நிழற்குடை அமைத்துத் தர வேண்டும் .பொம்மி நாயக்கன்பட்டி ஊராட்சி 2 ஆவது வார்டில்  மேல்நிலைத்  தொட்டி சேதமடைந்து தண்ணீர் வீணாகி வரும் நிலை யில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்  டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி கட்சி நிறுவனர் தொல்.திரு மாவளவன் எம்பியின் பிறந்த நாளில் சனநாயகம் காப்  போம் சிறுத்தைகளின் அணிவகுப்பு என்ற முழக்கத்தோடு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

மனைவியை துன்புறுத்தியவருக்கு 5 ஆண்டு சிறை 

விருதுநகர், மார்ச் 28- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது மேபுதூர். இங்குள்ள  அண்ணாநகரை சேர்ந்தவர் ஜான்ராஜ்.  இவர்  மனைவியை துன்புறுத்தியதாக 2014 ஆம் ஆண்டு சாத்தூர் தாலுகா காவல் நிலை யத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது, திருவில்லி புத்தூர் மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த  நீதிபதி பகவதியம்மாள், ஜான்ராஜூக்கு 5 ஆண்டுகள்  சிறை தண்ட னையும் ரூ.2 ஆயிரம் அபதாரம் விதித்து தீர்ப்பளித்தார்.

திடக்கழிவு மேலாண்மை  பணிகளுக்கு புதிய வாகனங்கள்

மதுரை, மார்ச் 28- மதுரை மாநகராட்சி அறி ஞர் அண்ணா மாளிகை வளா கத்தில் திடக்கழிவு மேலா ண்மை பணிகளுக்காக புதிய வாகனங்களை மேயர்  இந்தி ராணி பொன்வசந்த், ஆணை யாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகி யோர் மார்ச் 28 அன்று கொடி யசைத்து துவக்கி வைத்தனர்.    மதுரை மாநகராட்சி பகு திகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணியின் கீழ் சாலை கள் அமைத்தல், மழைநீர்  வடிகால்கள், பாதாளச் சாக்கடை பணிகள், தெரு விளக்குகள் பராமரித்தல்,  தூய்மை பணிகள், கால்வாய்  கள் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்  படுத்துதல் உள்ளிட்ட பல்  வேறு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் உள்ள பாதாளச் சாக்கடைகளில் அடிக்கடி அடைப்புகள் ஏற்  படுவதை உடனடியாக சரி செய்வதற்கு மாநகராட்சி யில் கழிவுநீர் உறிஞ்சு வாக னங்கள் வாங்கப்பட்டு தொடர்ந்து பயன்படுத்தப் பட்டு வருகிறது.   தற்போது பாதாளச் சாக்கடையில் ஏற்படும் மணல்களை மட்டும் பிரித்து உடனுக்குடன் எடுத்து அகற்றுவதற்கு 15 சிஎப்சி  திட்டத்தின் கீழ் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 12 புதிய வாக னங்கள் வாங்கப்பட்டுள ளது. புதிதாக வாங்கப்பட் டுள்ள வாகனங்களை மேயர், ஆணையாளர் ஆகியோர் பயன்பாட்டிற்கு வக்கி வைத்தார்கள்.  இந்த  புதிய வாகனத்தின் மூலம் மதுரை மாநகராட்சி பகுதி களில் உள்ள பாதாளச் சாக்க டைகளில்  உள்ள மணல்  அடைப்புகள் உடனுக்குடன்   விரைந்து சரிசெய்யப்படும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

;