நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் கீரைத்துறை 86 ஆவது வார்டு பி. சாந்தி, அனுப்பானடி 88 ஆவது வார்டு ஜே. சகுந்தலா மற்றும் மதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பிப்ரவரி 13 ஞாயிறன்று வாக்குச்சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.