districts

img

ஆதரவற்ற பெண்ணுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க தலையீட்டினால் ஆட்சியர் நிதி உதவி

இராஜபாளையம், ஜன.18- விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் அருகே சேத்தூர் பழைய காவல் நிலைய தெரு வைச் சேர்ந்தவர் குரு பாக்கியம் (வயது 35). இப்பெண்ணின் கண வர் பிரிந்து சென்றுவிட்டார். இப் பெண்ணிற்கு 15 வயதில் சுரேஷ் என்ற மகனும் 8 வயதில் மகா லட்சுமி என்ற மகளும் உள்ள னர்.  இந்த பெண்ணிற்கு கடுமை யான உடல்நலக் குறைவு ஏற் பட்டு வேலை செய்ய முடியாத நிலையில் மன உளைச்சல் ஏற் பட்டு வீட்டிலேயே பட்டினியுடன் இருந்துள்ளார். இதை அறிந்த மகன் சுரேஷ் எட்டாவது படித்துக் கொண்டிருந்த நிலை யில் பள்ளியில் இருந்து விலகி கட்டிட தொழிலாளியாக வேலை செய்து குடும்பத்தைக் காப் பாற்றி வந்தார்.   இதை அறிந்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் ராஜபாளையம்  மேற்கு ஒன்றிய செயலாளர் கணே சன் மற்றும் ஈன்றவர் உள்ளம் அறக்கட்டளை நிர்வாகி ராதா கணேசன் இணைந்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதன்பின்னர் மாவட்ட ஆட்சி யர் மேகநாத ரெட்டி திங்கட் கிழமை அன்று நேரடியாக அப் பெண்ணுடைய வீட்டிற்கு வந்து,  அவருக்கு குடும்ப அட்டை, மகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் குரு பாக்கியத்தின் மகன் படிப்பிற்காக கைபேசி மற்றும் ஒரு வார காலத்திற்குள் வீட்டுமனைப்பட்டா வழங்கு வதற்கான உறுதியை கொடுத்து ஆறுதல் கூறி விட்டுச் சென்றார்.  சேத்தூர் மக்கள் உதவிக்கு ஏற்பாடு செய்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தினையும் ஈன்றவர் உள்ளம் அறக்கட்டளையையும் பாராட்டினர்.