districts

img

விசைத்தறி தொழிலாளர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கிடுக!

நாமக்கல், ஜூன் 29- தமிழகம் முழுவதும் உள்ள விசைத்தறி தொழி லாளர்களுக்கு  வட்டியில்லா கடன்கள் வழங்க வேண்டும் என்று சிஐடியு விசைத்தறி தொழிலா ளர் சம்மேளன மாநில மாநாடு வலியுறுத்தி யுள்ளது.  தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மே ளன 3 ஆவது மாநில மாநாடு நாமக்கல் மாவட் டம், பள்ளிப்பாளையத்தில் தேனி  தோழர் எம்.காமராஜ் நினைவரங்கத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாநாட்டு கொடியை மாநில நிர்வாகி எம்.சந்திரன் ஏற்றி வைத்தார். மாநாட்டிற்கு சம்மேளனத் தலைவர் பி.முத்துசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ந.வேலு சாமி வரவேற்புரையாற்றினார். மாநில நிர்வாகி ஆர்.சோமசுந்தரம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சம்மேளன பொதுச்செயலாளர் எம். சந்திரன் வேலையறிக்கையையும், சம்மேளன பொருளாளர்  எம்.அசோகன் வரவு - செலவு அறிக் கையையும் சமர்ப்பித்தனர்.  பஞ்சாலை தொழிலா ளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் எம்.அசோகன் வாழ்த்துரையாற்றினார். முன்னதாக, பள்ளிபாளையம் தியாகி வேலுச் சாமி நினைவு கொடி மரத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பெற்றுக்கொண்டார். சங்கரன்கோவிலில் இருந்து வந்த தோழர் மாடசாமி நினைவு ஜோதியை மாநிலச் செயலா ளர் கே.சி.கோபிகுமார் பெற்றுக்கொண்டார். தேனி தோழர் காமராஜ் நினைவாக மாநாட்டுக் கொடியினை சம்மேளன செயலாளர் எம்.சந்தி ரன் பெற்றுக்கொண்டார். திருப்பூர் பழனிச்சாமி நினைவு ஜோதியை  சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுச்சாமி பெற்றுக்கொண்டார்.

தீர்மானங்கள்

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண் டும். விசைத்தறி, கைத்தறி மற்றும் பனியன் உள்ளிட்ட ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் அனைத்து தொழில்களும் பல்வேறு நெருக்க டிகள் உள்ளாகி இருப்பதால் நூலை ஏற்றுமதி செய்யக்கூடாது. ஜவுளி கார்ப்பரேஷன் கழகம் உருவாக்க வேண்டும். கந்துவட்டி கொடுமை களை ஒழித்து விசைத்தறி தொழிலாளர்களை பாதுகாக்க புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும். திருச்செங்கோட்டில் கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த குடும்பத்திற்கு, இலவச வீட்டு மனை, பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி நிதியை அரசு ஏற்க வேண்டும். விசைத்தறி தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பும் சட்ட பாதுகாப்பும்,  இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட சட்ட சலுகைகளும் வழங்க வேண்டும். 8 மணி நேர வேலை, மாதம் 26 ஆயிரம் ரூபாய் ஊதியம், இலவச வீடுகள் கட்டித் தர வேண்டும். தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முழுவதும் உள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கு  வட்டியில்லா கடன்கள் வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலுக்கு இலவச மின்சாரத்தை அதிகப்படுத்தி, ஜவுளி சந்தைகள் அமைக்க வேண்டும். ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ள விசைத்தறி தொழிலாளர்க ளுக்கான குழு காப்பீடு திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். சங்கத்தின் மாநிலத் தலைவராக பி. முத்துசாமி, மாநில பொதுச்செயலாளராக எம். சந்திரன், மாநிலப் பொருளாளராக எம்.அசோ கன், மாநிலத் துணைத்தலைவர்களாக ஆர். சோமசுந்தரம், க.ரத்தினம், ராமர், பிருந்தாவனம், எஸ்.சுப்பிரமணி, செல்வம், மாநில துணைச் செயலாளர்களாக லட்சுமி, ஜோதிபாசு, வெங்க டேசன், கே.வேலுச்சாமி, கே.மோகன், வெங்க டேஷ், சஞ்சீவ நாச்சியார் உட்பட 22 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. நிறைவாக, வரவேற்புக்குழு செயலாளர் கே.மோகன் நன்றி யுரையாற்றினார்.

அ.சவுந்தரராசன் பேச்சு 

முன்னதாக, மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசு கையில், நூல், பஞ்சு விலை ஏறுவதற்கு ஒன்றிய அரசு தான் முக்கிய காரணம். இதற்கான மூலப் பொருட்களை உண்டாக்க வேண்டும். பருத்தி உற்பத்தியில் மகாராஷ்டிராவிற்கு  அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. பருத்தி உற்பத்தியை மேம் படுத்துவதற்கு, உரம்  உள்ளிட்டவைகளை அர சாங்கம் வழங்க வேண்டும். பள்ளிபாளையம் உள்ளிட்ட விசைத்தறி தொழில்கள் நிறைந்த பகுதி களில் வாரத்தில் 3 நாட்கள்தான் விசைத்தறி சத்தம் கேட்கிறது. தொழிலாளர்கள், ஊழியர்க ளின் உரிமைகளை தேர்தல் அறிக்கையில் அறி வித்ததுபோல, அதனை செயல்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. தொழிலாளர்கள், விவ சாயிகள், சிறு உற்பத்தியாளர்கள் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது என்றார். விசைத்தறி தொழிலில் இரவும், பகலும் பணி யாற்றும் தொழிலாளர்கள் 60 வயதுக்குப் பிறகு பெரிய சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆடு, மாடு களைப் போல தொழிலாளர்களை பயன்படுத்து கின்றனர். மயிலுக்கும், மாட்டுக்கும் கொடுக்கும் மரியாதை கூட நம்மைப்போல உழைக்கும் தொழி லாளர்களுக்கு கிடைப்பதில்லை. தொழிலாளர்கள் எல்லாம் ஒரே நேரத்தில் அணிதிரண்டால் கோட்டை, கொத்தளம் எல்லாம் சரிந்துவிடும். இதனை வீடு வீடாக, பட்டறை பட்டறையாக சென்று சேர்க்க வேண்டும். ஒரு வலு வான அமைப்பை நாம் உண்டாக்கினால் எல்லா மட்டத்திலும்  மாற்றம் உருவாக்க முடியும். குறைந்தபட்ச ஊதியம், கூலி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க முடியும். அதற்கான வழி காட்டும் வகையில் நம்முடைய சம்மேளன மாநாட்டை பயன்படுத்திக் கொண்டு, அமைப்பு  செல்லாத  இடத்திற்கு கூட சங்கத்தை எடுத்து செல்ல வேண்டும். நமது விசைத்தறி தொழிலா ளர்  சங்கம் இல்லாத பகுதிகளில் வலுவாக கட்டி பணியாற்ற  வேண்டும் என்றும் கூறினார். 


 

;