districts

img

தரமான சாலைகள் அமைக்க சின்னாளபட்டி பேரூராட்சி கோரிக்கை

சின்னாளப்பட்டி,ஆக.12- திண்டுக்கல் மாவட்டம் சின்னாள பட்டியில் சின்னாளப்பட்டி பிரிவு முதல் பேருந்து நிலைய நுழைவு வாயில் வரை நெடுஞ்சாலை துறையினர் கடந்த சில மாதங்களாக அவசர அவசரமாக சாலை போட்டு வந்தனர். பல இடங்களில் சாலைகள் பெயர்ந்து  குண்டும் குழியுமாகி வாகன ஓட்டிகளும்  மக்களும் அவதிப்பட்டனர். சின்னா ளப்பட்டி பேரூர் கழக திமுகவினர் உடனடி யாக தலையிட்டு, தரமற்ற சாலைகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதன்பின்னர் ஒரு சில இடங்களில் மட்டுமே சீரமைத்தனர். இதுகுறித்து நாளி தழ்களில் செய்திகள் வெளியாகி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு சென்றது.  இதனைத்தொடர்ந்து சின்னாளப்பட்டி பேரூராட்சி அவசர கூட்டம் வெள்ளியன்று பேரூராட்சி மன்ற தலைவர் பிரதீபா கனக ராஜ் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஆனந்தி பாரதி ராஜா, செயல் அலுவலர் செல்வராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். சின்னா ளப்பட்டி முழுவதும் தரமற்ற சாலை கள் போடுவதற்கு நெடுஞ்சாலைத்துறை யினரிடம் கோரிக்கை வைப்பதாக தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. தலைமை எழுத்  தர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.