மதுரை, ஜன.24- தமிழர் என்ற நமது அடையா ளத்தோடு இதுபோன்ற பண்பாட்டுத் திருவிழாக்களை ஒற்றுமையாக நடத்துவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழு வுதல் அரங்கத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழர் பண்பாட்டு விளை யாட்டான ஏறுதழுவுதலுக்கு சங்கம் வளர்த்த மதுரையில் இந்த மாபெரும் அரங்கம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. பல்லாயிரம் ஆண்டு பெருமை கொண்ட நம்முடைய தமிழினம் கொண்டாடும் ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியதற்கு வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்தி ருக்கக்கூடிய பெருமை! திமு க ஆட்சி அமைந்து, மூன்று ஆண்டுகளுக்குள் தமிழினத்தினு டைய பழமையை சொல்கின்ற கீழடி அருங்காட்சியகம், கலைஞரின் பெயரால் மாபெரும் நூலகம், இப்போது மூன்றாவதாக, இந்த கலை ஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ஜல்லிக்கட்டுக்கு அமைக் கப்பட்டிருக்கிறது.
இந்த நேரத்தில், 2015-ஆம் ஆண்டு அறிவித்து, இன்றைக்கு வரைக்கும் மதுரைக்கு மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய பா.ஜ.க அரசால் கொண்டு வரப்படாத ஒரு திட்டம் இருக்கிறதே, அது உங்கள் ஞாபகத்திற்கு வந்தால், அதுக்கு நான் பொறுப்பில்லை! தை மாதம் தொடங்கி பொங்க லுக்காக முதல் மூன்று நாள், அரசு கருவூலத்தை தவிர மற்ற பொது அலுவலகங்களை மூடவேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கவர்னர் அறிவித்திருக்கிறார். தமிழர்களின் பண்பாட்டை சரியாக அறிந்தவர்களாக, அந்தக் காலத்து கவர்னர்கள் இருந்திருக்கி றார்கள்.
பல நூற்றாண்டிற்கு முந்தைய நூல்களும், ஓவியங்களும், புகைப் படங்களும் இங்கே இருக்கிறது. இதனை உருவாக்கித் தந்த தமிழ் இணையக் கல்விக் கழகத்துக்கு நன்றி. சாதிப் பிளவுகளும், மத வேறு பாடுகளும், தமிழர் ஒற்றுமையை சிதைக்க பிற்காலத்தில் உருவாக்கப் பட்டவை என்பதை உணர்ந்து, தமிழர் என்ற நமது அடையாளத்தோடு இது போன்ற பண்பாட்டுத் திருவிழாக்க ளை ஒற்றுமையாக நடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.