districts

img

தேனி மாவட்டத்தில் 906 பெண் குழந்தைகளுக்கு ரூ.2.26 கோடியில் வைப்புத்தொகை ஆணை வழங்கல்

தேனி,செப்.25- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமை யிலான தமிழக அரசு பெண்  சிசு கொலையினை தடுத்து,  சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்திடும் உணர்வோடு, பெண் குழந்  தைகளை பாதுகாத்திடவும், ஆண் குழந்தைகளை மட்டும் விரும்பும் மனப்போக்கை கட்டுப்படுத்திடவும், சிறு  குடும்ப முறையை ஊக்கு விக்கவும், பெண் குழந்தை கள் பெற்றதனால் பொருளா தார பாதிப்பு என்ற பெற் றோர்களின் மனநிலையை போக்கிடவும், வறுமையில் வாழும் ஏழை தாய்மார்  களின் பெண் குழந்தைகளுக்கு கல்வியை வழங்கிட வேண்  டும் என்பதனை கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் பெண் குழந்தை பாது காப்புத் திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது.  

தேனி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மக ளிர் உரிமைத்துறையின் மூலம் முதலமைச்சரின் பெண்  குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 07.05.2021  முதல் தற்போது வரை ஆண்டி  பட்டி சட்டமன்ற தொகுதிக்கு  உட்பட்ட 182 பெண் குழந்தை களுக்கு ரூ.45,30,400  மதிப்பி லான வைப்புத்தொகையும், கம்பம் சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட 301 பெண்  குழந்தைகளுக்கு ரூ.75,25, 000 மதிப்பிலான வைப்புத்  தொகையும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 211 பெண் குழந்தை களுக்கு ரூ.52,75,000  மதிப்பி லான வைப்புத்தொகையும், போடிநாயக்கனூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட 212  பெண் குழந்தைகளுக்கு ரூ. 53,25,000  மதிப்பிலான வைப்  புத்தொகையும் என மொத்  தம் 906 பெண் குழந்தை களுக்கு ரூ.2,26,55,400  மதிப்  பிலான வைப்புத்தொகைக் கான ஆணைகள் வழங்கப் பட்டு, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி  மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கம்பம் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட கம்பம் நக ராட்சிப் பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டியன்  மனைவி செ.நாகசிஞ்சு தெரி விக்கையில்,  சமூக நலன்  மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் முதல மைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் எனது இரண்டு பெண் குழந்  தைகளுக்கும் நிதியுதவி வேண்டி விண்ணப்பித்தேன். விண்ணப்பத்தின் மீது சம்பந்தப்பட்ட துறை  அலு வலர்கள் எனது இல்லத் திற்கு வந்து உரிய விசா ரணை மேற்கொண்ட பின்  எனது இரண்டு பெண்களின் பெயரிலும் தலா ரூ.25 ஆயி ரம் வைப்புத்தொகைக்கான ஆணை வழங்கினார்கள். இதன்மூலம் எங்களது இரண்டு பெண்குழந்தை களின் படிப்பு மற்றும் எதிர்  கால வாழ்விற்கு வரபிரசாத மாக வைப்புத்தொகை அமைந்துள்ளது. எங்களை போன்ற ஏழ்மை நிலையில் வாழந்து வரும்; பெண்  குழந்தைகளை பாதுகாத்தி டும் பொருட்டு முதலமைச்ச ரின் பெண் குழந்தை பாது காப்புத்திட்டத்தினை செயல்  படுத்தி வருகின்ற  தமிழ்நாடு முதலமைச்சருக்கு  நெஞ்சா ர்ந்த நன்றியினை தெரி வித்துக்கொள்கிறேன் என்று  கூறினார். இத்தகவலை    செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.ஜெகவீரபாண்டியன்,  உதவி மக்கள் தொடர்பு அலு வலர் (செய்தி) அ.இளை யேந்திரன் ஆகியோர் தெரி வித்தனர்.

;