districts

img

சாத்தான்குளம் கொலை வழக்கு  சார்பு ஆய்வாளர் ரகு கணேசனுக்கு  ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு

 மதுரை, மார்ச் 30- சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதால் சார்பு ஆய்வா ளர் ரகு கணேசனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெய ராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறை யினரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் கோரி வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி முரளி சங்கர் அமர்வு முன்பு புத னன்று விசாரணைக்கு வந்தது. உயிரிழந்த ஜெயராஜின் மனைவி இந்த வழக்கில், தன்னையும் எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரினார். சிபிஐ தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதில், ‘‘இந்த சூழலில், ஜாமீன் வழங்கினால், சாட்சி களைக் கலைக்க வாய்ப்புள்ளதால், ஜாமீன் வழங்கக் கூடாது’’ என சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதி, ஜெயராஜின் மனைவி தரப்பில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய உத்தர விட்டார். வழக்கு விசாரணையை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

;