districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வாக்குச்சேகரிப்பு

  • மானாமதுரை நகராட்சி 1-ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தேன்மொழியை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி இரவிக்குமார் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். நிகழ்வில் ஒன்றியக் கழகச் செயலாளர் துரை.ராஜாமணி, மாவட்ட கழக பிரதிநிதி காளியப்பன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் முத்துசாமி, பாலு, புவியரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  • மானாமதுரை 18-வது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் விஜயகுமார் வாக்குச் சேகரித்தார்
  • போடி நகராட்சி 1-ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.செல்வராஜை ஆதரித்து கட்சியின் மூத்த தலைவர் கே.ராஜப்பன் வாக்கு சேகரித்தார். அருகில் திமுக, மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள்.
  • நத்தம் பேரூராட்சியில்  போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக சேர்மன் வேட்பாளர் சேக் சிக்கந்தர் பாட்ஷா கிறிஸ்தவ தேவாலயங்களில் வாக்குகள் சேகரித்தார்.  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.ஆண்டி அம்பலம், திமுக மாநில செயற்குழு உறுப்பினர் விஜயன், தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், சிபிஎம் நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள்  கலந்து கொண்டனர்.