மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியார் பேருந்து நிலையம் மாநகராட்சி 76-வது வார்டு மேலவாசல், திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் சுகாதாரத் சீர்கேட்டை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேலவாசல் பகுதியில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர் ரவிக்குமார் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.