நத்தம், மே 12? திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அய்யா பட்டியில் உள்ள காளி யம்மன், கருப்புசாமி கோவில் திருவிழாவை யொட்டி ஜல்லிக்கட்டு நடை பெற்றது. வருவாய் கோட் டாட்சியர் பிரேம்குமார், வட் டாட்சியர் சுகந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். திண்டுக்கல், சிவ கங்கை, திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, புதுக் கோட்டை, சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்த 312 காளைகள் அவிழ்த்து விடப் பட்டன. ஐந்து சுற்றுகளாக நடந்த போட்டியில் 100 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். சீறிப்பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் மடக்கிப் பிடித்தனர். பிடிபடாத மாட்டின் உரி மையாளர்களுக்கும், காளைகளை மடக்கிப் பிடித்த வீரர்களுக்கும், வெள்ளிக் காசுகள், கட்டில், பீரோ, சைக்கிள், குக்கர், பேன், சேர், வேஷ்டி துண்டு கள் உள்ளிட்ட பல்வேறு பரி சுப் பொருட்கள் வழங்கப் பட்டன. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசுகள் வழங்கினார். காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் பால மேட்டை சேர்ந்த ராஜா (23) திருப்பரங்குன்றம் பகு தியைச் சேர்ந்த பிரதீப்குமார் (55), மேலூர்- கேசம் பட்டியை சேர்ந்த சிட்டன் (28), சின்னக் கற்பூரம்பட்டி யைச் சேர்ந்த அரவிந்த் (20) உட்பட பத்து பேர் காயம டைந்தனர். இதில் இருவர் மேல் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் நத்தம் ஒன்றியக் குழுத் தலைவர் கண்ணன், பேரூராட்சி முன் னாள் தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கி யப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்புப் பணியில் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி தலைமை யில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்ட னர்.