districts

img

பிஎஸ்என்எல் ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப்.24-  பிஎஸ்என்எல் நிர்வாகத்தில் தொடரும் ஊழியர்கள் மீதான பாரபட்ச போக்கு, பழி வாங்கும் நடவடிக்கையினை எதிர்த்து பிஎஸ்என்எல் ஊழியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை தல்லாகுளம் பிஎஸ்என்எல் அலு வலகத்தில் வியாழனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்புத் தலைவர் உத்திரக்குமார் தலைமை வகித்தார். கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வின் சத்ய ராஜ், உதவித் தலைவர் முருகேஷ் பாபு ஆகியோர் விளக்கிப் பேசினர். பொருளா ளர் சண்முகவேல் நன்றி கூறினார்.  பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஐடிஏ நிலுவை தொகையை உடனே வழங்கவேண்டும். பதவி உயர்வு களில் ஊழியர்களுக்கு பாரபட்சம் காட்டு வதை தவிர்க்க வேண்டும். ஜூனியர் ஆபீசர், ஜூனியர் அக்கவுண்டன்ட் ஆபிஸர், ஜூனி யர் இன்ஜினியர் மற்றும் டெலிகாம் டெக்னீ சியன் இலாகா தேர்வுகளில் தேவையான காலி பணியிடங்களை நிரப்பிட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டன.