districts

img

குமரி கடல் பகுதியில் சூறைக்காற்று மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பிய விசைப்படகுகள்

நாகர்கோவில், ஜூலை. 01 கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு சுமார் 350 - க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அதி காலை மீன்பிடிக்க சென்று விட்டு இரவு கரைக்கு திரும்புவது வழக்கம். இங்கு பிடிக்கப்பட்டு கொண்டுவரப்படும் மீன்கள் வெளி யூர் மட்டுமின்றி கேரளாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தடைக்காலம் நிறைவடைந்து தற்போது மீன்பிடி சீசன் தொடங்கி உள்ளது. இந்தநிலையில் வெள்ளி யன்று காலையில் மீனவர்கள் வழக்கம்போல மீன்பிடிக்கச் சென்றனர். கரையில் இருந்து 9 நாட்டிக்கல் மைல் தொலைவில் விசைப் படகுகள் சென்றபோது, கடல் பகுதியில் சூறைக் காற்று வீசியதால் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால், விசைப்படகுகளை தொடர்ந்து இயக்குவதிலும், மீன் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதை யடுத்து மீனவர்கள் ஏமாற்றத்துடன் அவசர அவசரமாக கரை திரும்பி னர்.

;