districts

ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டத்தில் பயன்பெற்ற தூத்துக்குடி மாவட்ட பயனாளிகள்

தூத்துக்குடி ,ஜூலை 13 தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின்போது நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்ட தினால் வெளி மாவட்டங்கள், மாநி லங்களில் இருந்து காய்கறிகள் வரத்து குறைவு ஏற்பட்டு மக்களுடைய அன் றாடத் தேவைகள் பாதிக்கப்பட்ட தோடு காய்கறிகளின் விலையேற்றம் அதிகரித்தது. எனவே பொதுமக்களின் அன்றாடத் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்திடவும், அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் பரந்த நோக்கத்தோடு  தமிழக முதல மைச்சர் அவர்கள் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி அன்றாடத் தேவைக்கான நஞ்சில் லா காய்கறிகளை மகளிர் தங்களது இல்லங்களிலே உற்பத்தி செய்வ தற்கு ஊரகப்பகுதிகளில் ரூ.60- மதிப்புள்ள 12 வகை காய்கறி விதை கள் அடங்கிய தொகுப்பு 75 சதவீத மானியத்தில் ரூ.15-க்கும், நகர்ப் புறங்களில் ரூ.900-மதிப்புள்ள 6 வகை காய்கறி விதைகள் அடங்கிய மாடி தோட்ட தொகுப்பு 75 சதவீத  மானியத்தில் ரூ.225-க்கும், மக்களின்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வும், ஊட்டச்சத்தை மேம்படுத்தவும், கண் பார்வைக்கு பப்பாளி, நோய் எதிர்ப்பு சக்திக்கு எலுமிச்சை, பார்வை க்கு இரும்பு சத்துக்கு முருங்கையும், கறி வேப்பிலையும் மற்றும் கற்பூர வல்லி, திப்பிலி, கற்றாழை, புதினா போன்ற மருத்துவக் குணம் கொண்ட மூலிகைச் செடி அடங்கிய ரூ.100- மதிப்புள்ள தொகுப்பு 75 சதவீத  மானியத்தில் ரூ.25-க்கும் தமிழ்நாடு முழுவதும்  தமிழக முதலமைச்சர் (06.12.2021) அன்று சென்னையில் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் பயனாளிகளுக்கு மானிய விலையில் மாடித்தோட்ட தளைகள், காய்கறி விதைத் தளைகள், ஊட்டச்சத்து தளைகள் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தினை  சமூக நலன் மற்றும் மனித உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதாஜீவன் துவக்கி வைத்து பயனாளி களுக்கு மாடித்தோட்ட தளைகள், காய்கறி விதைத் தளைகள், ஊட்டச் சத்து தளைகள் ஆகியவற்றை 06.12.2021 அன்று வழங்கினார். ரூ.675 மானிய விலையில் 750 எண்ணிக்கையிலான மாடித்தோட்ட தளைகள் ஊரகப் பகுதிகளில் ரூ.45 மானிய விலையில் 4000 எண்ணிக்கை யிலான காய்கறி விதைத் தளைகள், ரூ.75 மானிய விலையில் 6000  எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து தளைகள் என மொத்தம் 10750 பய னாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத் திட்டத்தில் பயன் பெற்ற பயனாளியான தூத்துக்குடி மாவட்டம் குமாரகிரி பகுதியை சேர்ந்த நெல்லைவடிவு என்பவர் தெரிவித்ததாவது: எனக்கு சிறு வயதிலிருந்தே இயற்கை முறையில் காய்கறித் தோட்டம், மூலிகை செடிகளை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது.

ஆனால் போதிய இடவசதி இல்லா ததால் தோட்டம் அமைக்க இயல வில்லை. எனது குடும்பம் 1000 சதுர  அடி கொண்ட மாடி வீட்டில் வசித்து  வருகிறோம். மாடிகளில் காய்கறித் தோட்டம் அமைக்கலாம் என்பதை அறிந்தேன். தற்போது தமிழக முதலமைச்சர் அவர்களின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத்  திட்டத்தி னை அறிந்து தூத்துக்குடி தோட்டக் கலை மலைப்பயிர்கள் துறைக்கு சென்று மானிய விலையில் மாடித் தோட்ட 12 வகையான காய்கறி விதை கள் உள்ளடக்கிய தொகுப்பு (கத்தரி, மிளகாய், தக்காளி, அவரை, பீர்க்கு,  புடலை, பாகல், சுரை, கொத்தவரை, சாம்பல் பூசணி, கீரை போன்ற ஊட்டம் தரும் காய்கறி விதைகளைப் பெற்று எங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்தேன். இதன் மூலம் வீட்டுக்கு தேவையான காய் கறிகளை மாடித்தோட்டத்தில் இயற்கை முறையில் நஞ்சில்லா காய் கறிகளை இல்லத்திலே எந்த செலவும் இன்றி பெற்று பயன் அடைந்து வரு கிறேன். முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித்தோட்டம் மாடியில் அமைத்திட தேவையான மாடித் தோட்ட பைகள், விதைகள், ஊக்கிகள் ஆகியவை தந்து இத்திட்டத்தை செயல்படுத்தி ஊக்கம் அளித்த தமிழக முதல்வருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கி றேன் என்றார்.

தொகுப்பு: சு.ஜெகவீரபாண்டியன், 
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், 
எஸ். செல்வலெட் சுஷ்மா, 
உதவி மக்கள் தொடர்பு அலுவலர், 
தூத்துக்குடி மாவட்டம்.